Saturday, September 26, 2020

இந்த நீண்ட நெடிய உருவம்

•இந்த நீண்ட நெடிய உருவம் ஏன் இந்தளவு கூனிக்குறுகி பிச்சை எடுக்கிறது? இருவரும் தமிழர்கள் மட்டுமல்ல கவிஞர்களும்கூட இருவரும் தமிழ் உணர்வாளர்கள் மட்டுமன்றி ஈழத் தமிழர் ஆதரவாளர்களும்கூட. ஒருவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். மற்றவர் கவிஞர் வைரமுத்து ஈழத் தமிழர்களை கொலை செய்தமைக்காக ராஜீவ்காந்தியை வயிறு வெடித்து சாவாய் என்று அறம் பாடினார் பெருஞ்சித்திரனார். அதனால் தடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டார். ஆனாலும் அவர் தமிழர்களை கொன்றவர்களை ஒருபோதும் போற்றிப்பாடவில்லை. கவிஞர் வைரமுத்து அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர். அதுமட்டுமன்றி இந்த முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி ஒரு காப்பியம் படைப்பேன் என்றும் கூறினார். அவர் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி கவிதை எழுதாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தைத் தந்தவரையே புகழ்ந்து பாடுகிறாரே? பிரணாப்முகர்ஜி மறைவுக்கு இந்தியா எழுந்து நின்று மௌனிக்கிறது என்கிறார். இந்தியா உங்களை நீண்டகாலம் நினைக்கும் என்கிறார். கலகம் செய்ய துணிந்தவனுக்கு உதவி செய்வதே ஒரு கவிஞனின் பணியாக இருக்க வேண்டும். பெருஞ்சித்திரனார் உணர்ச்சிக் கவிஞர். அதனால்தான் அவரின் கவிதைகள் இன உணர்வை ஊட்டி போராட்டத்திற்கு உதவி புரிகின்றன. வைரமுத்து ஒரு சோற்றுக் கவிஞர். அதனால்தான் வயிற்றுப்பிழைப்புக்காக குனிந்து பிச்சை எடுக்கிறார்.

No comments:

Post a Comment