Saturday, September 26, 2020

எம்மால் மறக்கவும் முடியவில்லை

•எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை!! “உலகத் தொழிலார்களே ஒன்று சேருங்கள்” என்று காரல் மார்க்ஸ் சொல்லுமுன்னரே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறிய இனம் தமிழ் இனம். வந்தாரை வாழ வைத்த அந்த இனம் கைபர் கணவாய் வழியே வந்த திருட்டு கூட்டத்திடம் இரந்து கேட்டது. 17 பேர் தீக்குளித்து இறந்தும் கேட்டனர். தன் கைக்கெட்டும் தூரத்தில் தன் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம்பேர் இறந்தபோது தாய்த் தமிழகம் செய்வதறியாது திகைத்து நின்றது. ஆனாலும் அந்த வெளிவிவகார அமைச்சர் இரங்க மறுத்தார். அவர் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்” என்றார். ஆனால் யுத்தத்தை இலங்கை இந்திய அரசுகள் சேர்ந்தே செய்தன. தமிழ் இனப் படுகொலையை சேர்ந்தே செய்தன என்ற உண்மைகள் இப்போது வெளிவந்துவிட்டன. அதுமட்டுமன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த விடயத்திலும் இந்திய அரசு சார்பில் இவருக்கும் நேரடிப்பங்கு உண்டு. பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களின் மரணங்களுக்கு காரணமானவர். பல கோடி தமிழக தமிழ் மக்களின் கோரிக்கையை மதிக்காதவர். இன்று இவர் மரணமடைந்துவிட்டார் எனில் தமிழனாகிய எம்மால் எப்படி வருத்தப்பட முடியும்? ஏனெனில் எம்மால் இவரை மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.

No comments:

Post a Comment