Saturday, September 26, 2020

இவர்கள் ஏன் நடக்கிறார்கள்?

•இவர்கள் ஏன் நடக்கிறார்கள்? இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் கொரோனோ என்று வீட்டுக்குள் இருந்திருக்கலாம். அல்லது, இவர்கள் விரும்பியிருந்தால் நண்பர்களுடன் பாபர்கியூ சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் குடுமபத்தினருடனும் பிள்ளைகளுடனும் நேரத்தை செலவு செய்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இவர்கள் இதையெல்லாம் விட்டிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி ஒட்டாவா செல்கிறார்கள். உண்மையில் ஒட்டாவில் சென்று கேட்பது என்றால் இவர்கள் காரிலோ அல்லது ரயில் மூலமோ சென்றிருக்கலாம். ஆனால் இவர்களோ கனடாவில் பிறம்டனில் இருந்து நடந்து ஒட்டாவா செல்கிறார்கள். வழியெங்கும் தமிழ் மக்களுக்கு எற்பட்ட இன அழிப்பை மக்களுக்கு கூறிச் செல்கிறார்கள். இதன் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுகிறார்கள். மக்களின் ஆதரவின் மூலமே தமிழருக்கான நீதியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்படுகிறார்கள். சரியான பாதையில்தான் நடக்கிறார்கள். எனவே அவர்கள் தமக்குரிய இலக்கை மக்கள் ஆதரவுடன் அடைந்தே தீருவார்கள்;. கோத்தபாயா ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் பயத்தில் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என சிலர் நக்கலாக கூறினார்கள். ஆனால் தாயகத்தில்கூட இரண்டு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் இலங்கை தூதரக முற்றுகை, டிவிட்டரில் கவனயீர்ப்பு என பலவகைப் போராட்டங்கள். இவ்வாறு தமிழ் மக்கள் போராட்டம் நடத்தியிருப்பது மட்டுமல்ல உலகில் பல இடங்களில் ஒன்றுபட்டு போராட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தருகிறது. ஆம். போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை.

No comments:

Post a Comment