Saturday, September 26, 2020

எழுக தமிழ்!

• எழுக தமிழ்! “எழுக தமிழ்” என்று கூறும்போது சிலர் “தமிழ் என்ன வீழ்ந்தா கிடக்கிறது?” என்று நக்கலாக கேட்கிறார்கள். இதில் ஆச்சரியம் இல்லை. தமிழன் எழும் போதெல்லாம் இப்படி கேட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு படித்தவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களையும் தாண்டி தமிழ் இனம் எழுந்து நின்றது என்பதே சரித்திரத்தில் வீரம் செறிந்த வரலாறாக இருக்கிறது. வீழ்வது அவமானம் இல்லை. எழுந்து நிற்க முயலாமல் வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம். இதை தமிழ் மக்கள் நன்கு புரிந்திருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க முயல்கிறார்கள். நூறு வருடம் போத்துக்கேயரின் கீழு; வீழ்ந்து கிடந்தார்கள். ஆனால் நூறாவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. நூறு வருடம் ஒல்லாந்தரின் கீழ் விழுந்து கிடந்தார்கள். ஆனால் நூறவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. நூற்றிஜம்பது வருடம் ஆங்கிலேயரின் கீழ் விழுந்து கிடந்தார்கள். ஆனால் நூற்றிஜம்பதாவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. வரலாறு முழுவதும் விழுந்தபோதெல்லாம் எழுந்து நின்ற இனமே ஈழத் தமிழ் இனம். இப்போது எழுபது வருடமாக இலங்கை அரசின் கீழ் வீழ்ந்து கிடக்கிறார்கள். எனவேதான் தமிழ் மக்கள் எழுந்து நிற்க முயல்கிறார்கள். எனவே அந்த இனம் மீண்டும் எழுந்து நிற்க முயல்வது ஆச்சரியம் இல்லை. மாறாக எழுந்து நிற்காவிட்டால்தான் ஆச்சரியம்.

No comments:

Post a Comment