Saturday, September 26, 2020

யார் இவர்?

•யார் இவர்? இவரை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்? இவர் வியட்நாம் தந்தை என அழைக்கப்படும் ஹோ சிமின். இன்று அவரின் நினைவு தினம் ஆகும். (02.09.1969) பிரான்ஸ் அமெரிக்க வல்லரசுகளுக்கு எதிராக 20 வருடங்களுக்கு மேலாக போராடி வியட்நாமை விடுதலை பெற வைத்தவர். சரி. இவரை தமிழர்கள் ஏன் நினைவு கூர வேண்டும்? (1) எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாது என்ற உண்மையை உலகிற்கு காட்டியவர் இவர். (2) தேர்தல் பாதை மூலம் வியட்நாமை விடுவிக்க முடியும் என இவர் மக்களை ஏமாற்றவில்லை. மாறாக மக்களை திரட்டி ஆயுதப் போராட்ட பாதை மூலமே வெற்றி பெற்றார். (3) மிக முக்கியமாக வெற்றி பெற்ற பின்பு இவரிடம் உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காமல் மக்களிடம் கூறினேன். மக்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார். இந்தியா என்ற பெரிய நாட்டை ஈழத் தமிழர்கள் எதிர்க்க முடியாது என்பவர்கள், தேர்தல் பாதை மூலம் தமிழருக்கு தீர்வு பெற முடியும் என்பவர்கள் அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பொய் அறிக்கை விடுபவர்கள் படிக்க வேண்டிய வரலாறு ஹோ சிமின் வரலாறு ஆகும்.

No comments:

Post a Comment