Saturday, September 26, 2020

நீ ஊமையாக இருக்கும்வரை

•நீ ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்! டயபற்றிக்ஸ்க்கு சுகர் லெவலை குறைப்பதற்காக நடக்கிறார்கள் என சிலர் கிண்டல் செய்யலாம். நடந்துபோவதால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்துவிட முடியுமா என இன்னும் சிலர் குதர்க்கமாக கேட்கலாம். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் நான்காவது நாட்களாக நடக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் 106 கிலோ மீற்றர் நடந்துள்ளனர். உறுதி குலையாமல் கனடாவின் தலைநகர் ஓட்டோவாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். நாடு நாடாக அகதியாக அலைந்த யூத இனத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அடுத்த முறை இஸ்ரவேலில் சந்திப்போம் என்று கூறிக்கொள்வார்களாம். யூதர்கள் போல் இவர்கள் அடுத்தமுறை தமிழீழத்தில் சந்திப்போம் என்று கூறுவதில்லை. ஆனால் யுதர்கள் தமது இலக்கை அடைய எப்படியான ஒரு நம்பிக்கையை கொண்டிருந்தார்களோ அப்படியான ஒரு நம்பிக்கையை இவர்களும் கொண்டிருக்கிறார்கள். யூதர்கள் ஊமையாக இருக்காமல் உரத்து குரல் கொடுத்தார்கள். எனவேதான் சர்வதேசம் அவர்களுக்குரிய நீதியை பெற்றுக் கொடுத்தது. அதேபோல் இவர்களும் உரத்து குரல் கொடுக்கிறார்கள். எனவே கனடா அரசு இவர்களுக்குரிய நீதியை வழங்காவிட்டாலும் உலக மக்கள் நிச்சயம் பெற்றுக் கொடுப்பார்கள். ஏனெனில் மக்களை நம்பியவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை.

No comments:

Post a Comment