Friday, August 30, 2019

•குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது உண்மையே!

•குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது உண்மையே!
நான் இங்கு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை
ஆனால் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன்
தமது கையால் தமது சாப்பாட்டை உண்ண முடிந்தவர்களால்
தமது கையால் தமது குண்டியை கழுவ முடிந்தவர்களால்
தமது கையால் தமக்கு குடை பிடிக்க முடியாதா?
அதுவும் பதவி வந்தவுடன் தமக்கு குடை பிடிக்கவென
சம்பளத்திற்கு இன்னொரு ஆளை நியமிக்கத்தான் வேண்டுமா?
இதை “கௌரவம்” என நினைக்கிறார்களே! - இவர்களுக்கு
இது “அசிங்கம்” என எப்படி புரிய வைப்பது?
குறிப்பு- குரங்குகளுக்கு அருகில் எமது தலைவர்களின் படத்தை போட்டு குரங்குகளை நான் கேவலப்படுத்தி விட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

•இந்த அவலத்திற்கு யார் காரணம்?

•இந்த அவலத்திற்கு யார் காரணம்?
மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கு வரக்கூடாது என மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர்.
மகிந்த ராஜபக்ச லண்டனுக்கு வரக்கூடாது என லண்டன் தமிழர்கள் போராடுகின்றனர்.
மகிந்த ராஜபக்சா திருப்பதிக்கு சாமி கும்பிட வந்தால்கூட தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர்.
மகிந்த ராஜபக்ச இழைத்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என ஜெனீவாவில் ஐநா முன்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் போராடுகின்றனர்.
ஆனால் அதே மகிந்த ராஜபக்சா கட்சிக்கு சில தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்துள்ளனர்.
அதே மகிந்த ராஜபக்சவின் மகனிடம் ஒரு அரசியல் கைதியின் குடும்பம் கையேந்தி வீடு பெற்றுள்ளது.
இனி அடுத்து அதே மகிந்தராஜபக்ச மலர்மாலை அணிவித்து சில தமிழர்களால்; வரவேற்கப்படலாம்.
போகிற போக்கைப் பார்த்தால் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஒரு சீட்டை மகிந்த ராஜபக்சா வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்த அவல நிலைக்கு யார் காரணம்?
கடந்த 10 வருடமாக தமக்கு சொகுசு பங்களாவும் சொகுசு வாகனமும் கேட்டு வாங்கிய தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்காமையே காரணம் ஆகும்.
எனவே மகிந்த ராஜபக்சவை வரவேற்கும் தமிழர் மீது சினம் கொள்வதில் பயன் இல்லை. மாறாக அந்த அவல நிலைக்கு தமிழ் மக்களை தள்ளும் தமிழ் தலைமைகள் மீதே நாம் சினம் கொள்ள வேண்டும்.

என்னடி ஆச்சு உனக்கு? எதுக்கு மாப்பிளை பிடிக்கல்ல என்று சொல்லுறாய்?

என்னடி ஆச்சு உனக்கு? எதுக்கு மாப்பிளை பிடிக்கல்ல என்று சொல்லுறாய்?
அவரு பேஸ்புக்கை பார்த்தன் அம்மா. அதில சுமந்திரனோட கூட இருந்து போட்டோ போட்டிருக்கிறார். எனவே நிச்சயமாய் அவரு நல்ல ஆளாய் இருக்கமாட்டாரு வேற நல்ல மாப்பிளையை பாரு அம்மா!
குறிப்பு- இது வெறும் பகிடிதான். எனவே சுமந்திரன் செம்புகள் சீரியசாக எடுக்க வேண்டாம்.

•முதலாளித்துவ நெருக்கடியின் சிறந்த உதாரணம்

•முதலாளித்துவ நெருக்கடியின் சிறந்த உதாரணம்.
12,000 ஏக்கர் காப்பி தோட்டம்.
பல தலைமுறைகளாக காபி ஏற்றுமதி செய்யும் குடும்பம்.
உலகெங்கும் உள்ள தன்னுடைய 1752 காபி கடைகளின் மூலம் 2018ம் ஆண்டு வருமானம் மட்டும் 1814 கோடி..!
10000பேருக்கு மேல வேலை கொடுக்கும் நிறுவனத்தின் தலைவர்!
போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக பணக்காரர் வரிசையில் இடம் பிடித்தவர்..!
கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் மருமகன்..!
இத்தனை இருந்தும் ஒரு முதலாளி தற்கொலை செய்கிறார் என்றால் என்ன அர்த்தம்?
ஒரு முதலாளியின் கடனை அரசே ரத்து செய்கிறது.
இன்னொரு முதலாளி நாட்டை விட்டே ஓடுகிறார்.
வேறு ஒரு முதலாளி தற்கொலை செய்கிறார்.
ஏன் இந்த நிலை?
காப்ரேட் முதலாளிகள் உள்ளு+ர் முதலாளிகளை விழுங்கிறார்கள்
உள்ளு+ர் முதலாளிகள் சிறு முதலாளிகளை விழுங்கிறார்கள்
சிறு முதலாளிகள் நுகர்வோராகிய மக்களை விழுங்கிறார்கள்.
இந்த முதலாளித்துவ நெருக்கடியை கட்டுப்படுத்த வேண்டிய அரசோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு?
முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு சமூக அமைப்பை உருவாக்க வேண்டும்.
முதலாளித்துவத்தின் நெருக்கடியை சுட்டிக்காட்டி அதற்கான ஒரு மாற்று சமூகத்தை சுட்டிக்காட்டும் தத்துவமாக மார்க்சியம் மட்டுமே உண்டு.
எனவே மார்க்கியத்திற்கு மாற்றாக வேறு ஒரு தத்துவம் வரும் வரையில் மார்க்சியத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

•சம்பந்தர் அய்யா மெண்டலா? அல்லது மக்களை மெண்டலாக்க பார்க்கிறாரா?

•சம்பந்தர் அய்யா மெண்டலா? அல்லது
மக்களை மெண்டலாக்க பார்க்கிறாரா?
யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்களுக்கு பேராசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மாணவன் “ டாக்டர்! ஒருத்தருக்கு மெண்டல் குணமாயிடுச்சு என்று எப்படி கண்டு பிடிப்பது?" என்று கேட்டான்.
அதற்கு டாக்டர் “சின்ன சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.
“கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா டாக்டர்?” என்று மாணவன் கேட்டான்.
“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வைச்சிட்டு அதன் அருகில் ஒரு சின்ன ஸ்பூன், ஒரு மக்( குவளை) வைச்சிடுவோம். போய் அந்த பக்கெட்டில உள்ள தண்ணியை காலி பண்ணு என்று மனநோயாளியிடம் கூறுவோம்” என்றார் டாக்டர்
“ஓ! புரியுது. குணமாகாத ஆளாக இருந்தால் ஸ்பூனில தண்ணியை எடுத்து வெளில ஊத்திக்கிட்டு இருப்பான். அப்படிதானே டாக்டர்?” என்றான் மாணவன்.
அதற்கு டாக்டர் “எக்ஸாட்லி! இதுவே உன்கிட்ட சொல்லியிருந்தா நீ என்ன பண்ணியிருப்பே?” என்று கேட்டார்.
உடனே அந்த மாணவன் “ நானாய் இருந்தால் குவளையால் தண்ணியை மள மளவென்று அள்ளி ஊத்தியிருப்பேன்” என்றான்.
டாக்டர் சிரித்துக்கொண்டு சொன்னார் “ இந்த மாதிரி கேஸ்களை நாங்க செமி என்று சொல்வோம்”
இதைக் கேட்டு திகைத்த மாணவன்” என்னது டாக்டர்? நான் செமி மெண்டலா? அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?” என்று கேட்டான்.
“பக்கெட்டை எடுத்து கவுத்திட்டு போயிட்டே இருப்பான்” என்றார் டாக்டர்.
இதை அவதானித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் எழும்பி “ டாக்டர் எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்
டாக்டர் “ என்ன சந்தேகம் தாராளமாய் கேள்” என்றார்
“ஒரு வயதானவர் அடுத்த வருடம் தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தீர்வு வரவில்லை. அவர் முழு மெண்டலா? அல்லது செமி மெண்டலா?” என்று அந்த மாணவன் கேட்டான்.
அதற்கு அந்த டாக்டர் “அவர் மெண்டல் இல்லை. நல்ல தெளிவாகத்தான் இருக்கிறார். ஆனால் அவர் மக்களை மெண்டலாக்கப் பார்க்கிறார்” என்றார்.
(யாவும் கற்பனை அல்ல)
குறிப்பு- யாழ் மருத்துவ பீட மாணவர்களும் பேராசிரியரும் மன்னிக்க வேண்டும்.

“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!

“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!
1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் (My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது.
1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது.
•64 பொது மக்கள் கொல்லப்பட்டனர்
•100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர்
•50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்.
•சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன.
•40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன.
•150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன.
•வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது.
இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை.
வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை.
மன்னிப்பு கோர விட்டாலும் பரவாயில்லை. ஆனால் இறந்த தம் உறவுகளை வல்வெட்டித்துறை மக்கள் நினைவுகூர்வதைக்கூட யாழ் இந்திய தூதர் மிரட்டி தடுக்கிறார்.
என்னே கொடுமை இது? பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பது போல் நியாயம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை, நினைவு கூர்வதையாவது அனுமதிக்கும்படி கெஞ்ச வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை.

வட இந்தியாவில் ஆயுதங்களுடன் நடமாடலாம். எந்த நடவடிக்கையும் இல்லை.

வட இந்தியாவில் ஆயுதங்களுடன் நடமாடலாம். எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆனால் தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலை பற்றி பேசுவதற்கே வழக்கு.
இது ஐனநாயக நாடா? அல்லது பேய்கள் ஆட்சி செய்யும் காடா?
தமிழ் உணர்வாளர்கள் மீது வழக்குகள் போட்டு அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்தவிட முடியும் என இந்திய அரசு கனவு காண்கிறது.
அடக்குமுறை அதிகரித்தால் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் அதிகரிக்கும் என்பதை இந்திய அரசு விரைவில் கண்டுகொள்ளும்.
இந்திய அரசு என்ன மொழியில் பேசுகிறதோ அந்த மொழியில் பதில் அளிக்க உணர்வாளர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.
தமிழ்தேசிய விடுதலையை இனி எந்த அரசாலும் தடுத்துவிட முடியாது.
இந்திய அரசே!
தமிழ்தேசிய உணர்வாளர்கள் மீது வழக்கு போடாதே!
அவர்கள் மீது போட்ட வழங்குகளை உடனே வாபஸ் பெறு !!

உத்தம் சிங் நினைவை போற்றுவோம்

•உத்தம் சிங் நினைவை போற்றுவோம்
பஞ்சாபில் 400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று சுட்டுக் கொன்றவர் உதம்சிங.
1940ல் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்ட உதம்சிங் உடல் எச்சங்களை 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவுக்கு எடுத்துவந்து அரச மரியாதையுடன் அடக்கம் செய்தார்.
இந்திய பிரதமர் , ஜனாதிபதி உட்பட பலரும் உதம்சிங் உடலுக்கு மரியாதை செலுத்தி அவரை மாபெரும் தியாகி என புகழாரம் சூட்டினார்கள்.
இலங்கையில் 7000 தமிழர்களைக்கொன்ற, 800 பெண்களை கற்பழித்த, இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ்காந்தியை இந்தியா சென்று தானு கொன்றார்.
உதம்சிங்கை மாபெரும் தியாகி என்று கௌரவித்த இந்திய அரசு தானுவை பயங்கரவாதி என்கிறது.
"என் சகோதரியின் கற்பு பறிபோகும்போது என்னால் நிச்சயமாக அகிம்சையைக் கடைப்பிடிக்க முடியாது" என்று இந்தியாவின் தாத்தா காந்தி கூறினார்.
ஆனால் 800 பெண்கள் கற்பழிக்கப்பட்டமைக்கு தானு என்ற பெண் ராஜீவை பழிவாங்கினால் அதை பயங்கரவாதம் என இந்திய அரசு அழைக்கிறது.
இந்திரா காந்தியின் கொலையை அடுத்து இந்தியா வெங்கும் 5000 அப்பாவி சீக்கியர் கொல்லப்பட்டார்கள். அதற்கு பிரதமர் மோடி சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆனால் 7000 அப்பாவி தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டமைக்கு இதுவரை மன்னிப்பு கோராதது மட்டுமல்ல ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறது.
சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரியதுடன் அவர்களுக்கு ஆட்சியிலும் பிரதமர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழர்களிடம் மன்னிப்பு கோராதது மட்டுமல்ல தொடர்ந்தும் தமிழினம் நசுக்கப்படுகிறது.
இதற்கு காரணம் என்ன?
தமிழினம் அடிமையாக இருப்பதால்தானே இந்திய அரசு அதன் முதுகில் ஏறி சவாரி செய்கிறது!
தமிழினம் விடுதலை பெற்று சுதந்திரமாக இருந்தால் இந் நிலை வந்திருக்குமா?
உதம்சிங்கிற்கு ஒரு நியாயம். தானுவிற்கு இன்னொரு நியாயம். இதுதானா இந்திய நியாயம்?

•மறப்பது மக்கள் வழமை நினைவூட்ட வேண்டியது எமது கடமை

•மறப்பது மக்கள் வழமை
நினைவூட்ட வேண்டியது எமது கடமை
அடுத்த வருடத்திற்குள் தீர்வு வரும் என சம்பந்தர் ஐயா ஒவ்வொரு வருடமும் கூறுவது வழமை.
ஏன் இன்னும் அந்த தீர்வு வரவில்லை என்று கேட்டு நினைவூட்டுவதற்கான பதிவு அல்ல இது.
இது கடந்த வருடம் இதே மாதம் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி சம்பந்தர் ஐயா கூறியதை நினைவூட்டும் பதிவு.
10 நாட்களுக்கள் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு முடிவு வரும் என சம்பந்தர் ஐயா கடந்த வருடம் கூறியிருந்தார்.
அவர் கூறிய பத்து நாட்களும் கழிந்து விட்டது. அதற்கும் மேலாக ஒரு வருடமும் சென்று விட்டது.
ஆனால் சம்பந்தர் ஐயா கூறியபடி அரசியல் கைதிகள் பிரச்சனைக்கு எந்த முடிவும் இன்னமும் வரவில்லை.
“நாம் 11000 அரசியல் கைதிகளை விடுதலை செய்தோம். நாம் பதவிக்கு வந்தவுடன் மீதி இருக்கும் அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்வோம்” என நாமல் ராஜபக்சா அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் “நாமல் சின்னப் பையன். அவனுக்கு வரலாறு தெரியாது” என்று மாவை சேனாதிராசா கூறுகிறார்.
சரி, பெரிய பையனான வரலாறு தெரிந்த மாவை சேனாதிராசா அரசியல் கைதிகள் விடுதலைக்காக இதுவரை செய்தது என்ன?
சிறையில் தேவதாசன் என்ற அரசியல் கைதி 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். அவரை சென்று பார்வையிட மாவை சேனாதிராசாவுக்கு நேரம் இருக்கவில்லை.
ஆனால் யாழ்ப்hணத்தில் ஜஸ்கிறீம் கடை திறக்க மாவை சேனாதிராசாவுக்கு போதிய நேரம் இருந்திருக்கிறது
எப்படி இவர்களால் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடிகிறது?
தமிழ் மக்கள் தங்கள் தவறுகளை மறந்து விடுவார்கள் என்று இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
அதைவிட தாங்கள் என்ன தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்தி எழுத நாலு செம்புகள் தமக்கு இருக்கிறார்கள் என்றும் அவர்கள் நினைப்பதுதான்.
குறிப்பு- சுமந்திரன் செம்புகளுக்கு !
நாமல் ராஜபக்சா கூறியதை நான் சுட்டிக்காட்டியிரப்பதால் என்னை மகிந்தாவின் கைக்கூலி என எழுத முயல வேண்டாம். ஏனெனில் இது எனது கேள்விக்கான உரிய பதில் அல்ல.

மெதடிஸ்த திருச்சபையின் துணை தலைவராக சுமந்திரன் இருக்கிறார்

•மெதடிஸ்த திருச்சபையின் துணை தலைவராக சுமந்திரன் இருக்கிறார்
•மன்னாரில் மத மாற்றங்களுக்கு அவரே தலைமை தாங்கிறார்
•சுமந்திரன் மனைவிக்கு சம்பளமாக மாதம் தோறும் 175000 ரூபா வழங்கப்படுகிறது
•சுமந்திரன் மனைவியின் செலவு தொகையாக வருடம்தோறும் ஒரு கோடி ரூபா லண்டன் திருச்சபையால் வழங்கப்படுகிறது.
இப் பாரிய குற்றச்சாட்டுக்களை ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியுள்ளார்.
இவர் தற்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் இக் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
வழக்கமாக தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு சுமந்திரன் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மானநஷ்ட வழக்கு போடுவார்.
ஆனால் மறவன்புலவு சச்சிதானந்தனின் இக் குற்றச்சாட்டுகள் குறித்து சுமந்திரன் மௌனம் காத்து வருவது இவை உண்மைதானோ என நினைக்கத் தூண்டுகிறது.
இது குறித்து சுமந்திரனோ அல்லது அவரது செம்புகளோ பதில் தருவார்களா?