Friday, August 30, 2019

•மறப்பது மக்கள் வழமை நினைவூட்ட வேண்டியது எமது கடமை

•மறப்பது மக்கள் வழமை
நினைவூட்ட வேண்டியது எமது கடமை
அடுத்த வருடத்திற்குள் தீர்வு வரும் என சம்பந்தர் ஐயா ஒவ்வொரு வருடமும் கூறுவது வழமை.
ஏன் இன்னும் அந்த தீர்வு வரவில்லை என்று கேட்டு நினைவூட்டுவதற்கான பதிவு அல்ல இது.
இது கடந்த வருடம் இதே மாதம் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி சம்பந்தர் ஐயா கூறியதை நினைவூட்டும் பதிவு.
10 நாட்களுக்கள் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு முடிவு வரும் என சம்பந்தர் ஐயா கடந்த வருடம் கூறியிருந்தார்.
அவர் கூறிய பத்து நாட்களும் கழிந்து விட்டது. அதற்கும் மேலாக ஒரு வருடமும் சென்று விட்டது.
ஆனால் சம்பந்தர் ஐயா கூறியபடி அரசியல் கைதிகள் பிரச்சனைக்கு எந்த முடிவும் இன்னமும் வரவில்லை.
“நாம் 11000 அரசியல் கைதிகளை விடுதலை செய்தோம். நாம் பதவிக்கு வந்தவுடன் மீதி இருக்கும் அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்வோம்” என நாமல் ராஜபக்சா அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் “நாமல் சின்னப் பையன். அவனுக்கு வரலாறு தெரியாது” என்று மாவை சேனாதிராசா கூறுகிறார்.
சரி, பெரிய பையனான வரலாறு தெரிந்த மாவை சேனாதிராசா அரசியல் கைதிகள் விடுதலைக்காக இதுவரை செய்தது என்ன?
சிறையில் தேவதாசன் என்ற அரசியல் கைதி 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். அவரை சென்று பார்வையிட மாவை சேனாதிராசாவுக்கு நேரம் இருக்கவில்லை.
ஆனால் யாழ்ப்hணத்தில் ஜஸ்கிறீம் கடை திறக்க மாவை சேனாதிராசாவுக்கு போதிய நேரம் இருந்திருக்கிறது
எப்படி இவர்களால் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடிகிறது?
தமிழ் மக்கள் தங்கள் தவறுகளை மறந்து விடுவார்கள் என்று இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
அதைவிட தாங்கள் என்ன தவறு செய்தாலும் அதை நியாயப்படுத்தி எழுத நாலு செம்புகள் தமக்கு இருக்கிறார்கள் என்றும் அவர்கள் நினைப்பதுதான்.
குறிப்பு- சுமந்திரன் செம்புகளுக்கு !
நாமல் ராஜபக்சா கூறியதை நான் சுட்டிக்காட்டியிரப்பதால் என்னை மகிந்தாவின் கைக்கூலி என எழுத முயல வேண்டாம். ஏனெனில் இது எனது கேள்விக்கான உரிய பதில் அல்ல.

No comments:

Post a Comment