Friday, August 30, 2019

தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை

•தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழையாக இருந்தால் போதும் என நினைக்கும் தமிழ் தலைவர்கள்!
அவர்களே விக்கினேஸ்வரனை அழைத்து வந்து முதலமைச்சர் ஆக்கினார்கள்.
அப்புறம் அவர்களே முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள்.
விக்கினேஸ்வரனும் அவர்களுடைய கட்சி. விக்கினேஸ்வரன் நீக்கிய டெனீஸ்வரனும் அவர்களது கட்சி.
கட்சிக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனையை அவர்கள் ஏன் நீதிமன்றம் கொண்டு சென்றார்கள்?
நீதிமன்றம் முதலமைச்சருக்குரிய அதிகாரத்தை பறிக்கும் என்று நன்கு தெரிந்தும் எப்படி அவர்களால் இதனை மேற்கொள்ள முடிந்தது?
தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க போராடுவதாக கூறுபவர்கள் பெற்ற அதிகாரத்தையும் பறிப்பதற்கு எப்படி துணை போனார்கள?
எற்கனவே ஒரு வழக்கின் மூலம் ஒன்றிணைந்திருந்த மாகாணசபையை இரண்டாக பிரித்தார்கள்.
இப்போது இன்னொரு வழக்கின் மூலம் மாகாணசபையின் முதலமைச்சருக்குரிய அதிகாரத்தை பறி கொடுத்துள்ளனர்.
அடுத்து அப்படியே இன்னொரு வழக்கு போட்டு மாகாணசபையையே இல்லாமல் செய்யப் போகிறார்கள்.
தங்களுடைய பதவிச் சண்டையில் தமிழ் மக்களின் அதிகாரங்களை பறித்தெடுக்க துணை போகும் தமிழ் தலைவர்களை வரலாறு ஒருபோதும் மறக்காது. மன்னிக்காது.

No comments:

Post a Comment