Friday, August 30, 2019

•கோத்தபாயா ராஜபக்சா ஒரு ஹிட்லரா?

•கோத்தபாயா ராஜபக்சா ஒரு ஹிட்லரா?
கோத்தபாயா ராஜபக்சாவை ஹிட்டலராக வரைந்த இப் படத்தை ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.
ஹிட்லரை “சர்வாதிகாரி” என்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தைக்கூட மறுத்தமையினால் “பாசிட்” என்றும் கூறுகின்றோம்.
அவர் யூதர்களை கொன்றார். கம்யுனிஸ்ட்களைக் கொன்றார். மனதவுரிமைவாதிகளைக் கொன்றார்.
அவர் போலவே கோத்தபாயாவும் தமிழர்களை கொன்றார். தமிழர்களை ஆதரித்த கம்யுனிஸ்ட்களைக் கொன்றார் ஊடகவியலாளர்களைக் கொன்றார்.
ஆனால் இவற்றை அவர் மகிந்த ராயபக்சாவின் தலைமையில்தான் செய்தார். எனவே கோத்தபாயா ஹிட்லர் என்றால் மகிந்த ராசபக்சா “டபிள் ஹிட்லர்” என்று அழைக்க வேண்டியிருக்கும்.
ஆனால் தமிழர்களின் தலைவரான சம்பந்தர் ஜயாவே மகிந்த ராசபக்சாவை “தேசியத் தலைவர்” என்றும் அவரால் தான் தன்னால் திருகோணமலை சென்று வர முடிகிறது என்றும் அவரது கொலைகளை நியாயப்படுத்தி விட்டார்.
இங்கு கோத்தபாயா ராயபக்சாவை ஹிட்லர் என்று அழைக்கலாமா இல்லையா என்பது பற்றி ஆராய்வது இப் பதிவின் நோக்கம் இல்லை.
ஒருவேளை பதவிக்கு வந்தால் கோத்தபாயா ராஜபக்சா ஒரு ஹிட்டலராக மாறிவிடுவார் என்ற அச்சம் உண்மையில் ஜேவிபி க்கு இருக்குமாயின் அது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேசுவதே இப் பதிவின் நோக்கமாகும்.
உலகளவில் ஒரு மாபெரும் எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி அதன் மூலமே ஹிட்லரை அழித்தார் ஸ்டாலின்.
எனவே கோத்தபாயாவையும் தோற்கடிக்க வேண்டுமாயின் ஒரு பொது வேட்பாளரை ஜே.வி.பி நிறுத்த வேண்டும். இவ்வாறுதானே மகிந்த ராஜபக்சா முன்னர் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால் ஜேவிபி தனது வேட்பாளரை அறிவிக்க இருக்கிறது. அதன் மூலம் கோத்தபாயா எதிர்ப்பு வோட்டுகளை பிரித்து கோத்தபாயாவின் வெற்றிக்கு அது வழி சமைக்கிறது.
யுத்தத்தின் பேரால் கோத்தபாயா மக்களைக் கொன்றபோது அந்த யுத்தத்தை அதரித்து கோத்தபாயாவுக்கு மறைமுக ஆதரவை ஜேவிபி முன்னர் வழங்கியிருந்தது.
இப்பவும் தனித்து போட்டியிட்டு அதன் மூலம் கோத்தபாயாவின் வெற்றிக்கு மறைமுகமாக ஜேவிபி ஆதரவு வழங்குகிறது.
இப்படி ஒருபுறம் ஆதரவை வழங்கிக்கொண்டு மறுபறத்தில் கொலைகார ஹிட்லர் வருகிறார் என்று படம் போடுவதால் என்ன பயன்?

No comments:

Post a Comment