Friday, August 30, 2019

பணம் வீசி எறியப்படவும் இல்லை

பணம் வீசி எறியப்படவும் இல்லை
அதை “பொறுக்கொண்டு போ” என்று திருமாவை யாரும் கூறவும் இல்லை.
ஆனால் லண்டன் கூட்டத்தில் இப்படி நடந்ததாக கூறி ஒரு வீடியோ உலாவுகிறது.
இது ஒரு தவறான கருத்து. ஏனெனில் அந்த கூட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை நான் இருந்தேன்
கவிதை வாசித்த ஒருவர் தமிழர் வரலாறு திருமாவுக்கு முன் திருமாவுக்கு பின் என இருக்கிறது என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த இரு ஈழத் தமிழர்கள் “பொய் சொல்ல வேண்டாம்” என்றார்கள்
அதைத் தொடர்ந்து சோனியாவின் காங்கிரசுடன் திருமா கூட்டணி அமைத்தது குறித்து அந்த இரு ஈழத் தமிழர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமது எதிர்ப்பை தெரிவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அதேபோல் பதில் அளிக்க திருமாவுக்கும் கடமை உண்டு.
ஆனாலும் நிகழ்வை எற்பாடு செய்தவர்கள் அந்த இருவரையும் வெளியேற்றி விட்டார்கள்.
“அவர்களை வெளியேற்றாதீர்கள். நான் பதில் அளிக்கிறேன”; என்று திருமா கூறியும்கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களை வெளியேற்றி விட்டார்கள்.
இதேபோல் இதே இடத்தில் சுப வீரபாண்டியன் கூட்டம் நடைபெற்றபோதும் எதிர்ப்பு வந்தது. ஆனால் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் யாரையும் வெளியேற்றவில்லை
மாறாக தமது பேச்சைக் குறைத்தவிட்டு சுப. வீரபாண்டியனை பதில் சொல்ல தேவையான நேரத்தை வழங்கியிருந்தார்கள்.
ஆதேபோல் இந்த திருமாவின் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களை வெளியேற்றாது திருமா பதில் சொல்ல வழி விட்டிருக்க வேண்டும்.
ஆனால் இவர்களோ உரையாற்ற இருந்தவர்களின் நேரத்தை குறைத்ததும் அல்லாமல் யாரோ ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு திடீரென்று பேச வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
எப்படி ஒரு கூட்டம் நடத்தக்கூடாது என்பதற்கு நடந்து முடிந்த இந்தக் கூட்டமே இனி உதாரணமாக இருக்கும்.
உரையாற்றியவர்களில் ஒருவர் கூறியது போன்று முதலில் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் திருமாவின் “அமைப்பாய் திரள்வோம்” நூலைப் படிக்கட்டும்.

No comments:

Post a Comment