Friday, August 30, 2019

•இந்திய அரசு ஏன் புலிகளை தொடர்ந்தும் தடை செய்கிறது?

•இந்திய அரசு ஏன் புலிகளை தொடர்ந்தும் தடை செய்கிறது?
முதலில் மணமக்கள் தோழர் சீலன் தம்பதிகளுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரபாகரன் படத்தின் முன் திருமணம்
பிரபாகரன் படம் பொறித்த தாலி
பிரபாகரன் படம் கொண்ட செயின்கள்
பிரபாகரனுக்கு சாமிகளுக்கு மத்தியில் சிலை
பிரபாகரன் பெயரில் உணவகம்
பிரபாகரன் படம் தாங்கிய சட்டைகள்
பிரபாகரன் படம் ஏந்திய வாகனங்கள்
வீதிகளில் பிரமாண்ட பிரபாகரன் போஸ்டர்கள்
கட்சி மாநாடுகளில் பிரபாகரன் கட்அவுட்டுகள்
இவை எல்லாம் எதோ புலம்பெயர்ந்த நாட்டில் ஈழத் தமிழர்கள் மத்தியில் காணப்படுவதாக நீங்கள் நினைக்க கூடும்.
இவையாவும் இந்தியாவில் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் இன்று பரவலாக காணப்படுபவையாகும்.
இல்லாத புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு ஏன் தொடர்ந்தும் தடை போடுகிறது என்ற கேள்விக்கு இதுதான் விடையாகும்.
பயங்கரவாதி என்றார்கள்
ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலைகாரன் என்றார்கள்
சகோதரப் படுகொலை செய்தவர் என்றார்கள்
குழந்தைப் போராளிகளை கொண்டிருந்தவர் என்றார்கள்
மகிந்த ராஜபக்சவைவிட அதிக தமிழர்களைக் கொன்றவர் என்றுகூட கூறினார்கள்.
ஆனாலும் தமிழக மக்கள் மனங்களில் இருந்து புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் இந்திய அரசால் அகற்ற முடியவில்லை.
அதுமட்டுமல்ல கொலைகாரன் கொள்ளைக்காரன் என்றுகூறி இந்திய உளவுப்படைகளால் கொல்லப்பட்ட தோழர் தமிழரசனையும் தமிழக மக்கள் உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதன் ஒருவெளிப்பாடே தமிழ் இன உணர்வாளர் சீலன் அவர்கள் ஒருபுறம் தோழர் தமிழரசன் படம். இன்னொருபுறம் பிரபாகரன் தம்பதிகள் படம் வைத்து திருமணம் செய்து கொண்டதாகும்.
இந்த உணர்வுகள் தமிழகத்தில் ஒரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்துவிடுமோ என்று இந்திய அரசு அஞ்சுகிறது.
அதனால்தான் புலிகள் இயக்கத்திற்கு தொடர்ந்து தடை போடுகிறது. தமிழ் இன உணர்வாளர்களை பிடித்து சிறையில் அடைக்கிறது.

No comments:

Post a Comment