Friday, August 30, 2019

•தயவு செய்து இளகிய மனம் படைத்தவர்கள் இதனை படிக்க வேண்டாம்

•தயவு செய்து இளகிய மனம் படைத்தவர்கள் இதனை படிக்க வேண்டாம்
இந்தியாவில் நாகர்கோயில் மாவட்டத்தில் பல வருடங்களாக அகதியாக இருக்கும் ஈழத் தமிழர். அவர் பெயர் ஜோயி. வயது -30.
அவர் பார்த்து வந்த வேலை பறிபோய்விட்டது. எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை.
அதனால் தாசில்தார் அலுவலகம் சென்று தனக்கு வேலை தரும்படி கேட்டிருக்கிறார். வேலை எதுவும் கொடுக்காமல் அவரை விரட்டியிருக்கிறார்கள்.
இதனால் வேறு வழியின்றி பொலிஸ்நிலையம் சென்று தனக்கு ஒரு வேலை தாருங்கள் அல்லது கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
அவர்களும் அவரை விரட்டியுள்ளனரே யொழிய யாரும் அவர் நிலை குறித்து இரக்கம் காட்டவில்லை.
இதனால் அவர் வேறு வழியின்றி பஸ்நிலையத்தில் தன் உடல் மீது பெற்றோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால் அவரை பொலிஸ் காப்பாற்றிவிட்டது. இதைப் படிப்பவர்கள் இப்போது அவருக்கு ஒரு வேலையை தமிழக அரசு வழங்கியிருக்கும் என்றுதானே நினைப்பீர்கள். ஆனால் அதுதான் இல்லை.
அவருக்கு மனநோய் என்று கைது செய்து நாகர்கோயில் மருத்தவமைக்கு அனுப்பியுள்னர்.
என்னடா இரக்கம் இன்றி இப்படி செய்துள்ளார்களே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.
தமிழ்நாட்டு பொலிசாருக்கு கொஞ்சம் இரக்கம் இருக்கத்தான் செய்கிறது. இல்லையேல் அவரை பயங்கரமான புலி என்று கூறி கைது செய்து சிறப்புமுகாமில் அடைத்திரப்பார்கள்.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் இவர் மட்டுமல்ல தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழர்களின் நிலை இதுதான்.
உயர் கல்வி கற்கமுடியாது. அரச வேலை எதுவும் பெற முடியாது. தனியார் நிறுவனங்களில்கூட கௌரமான வேலை எதுவும் பெற முடியாது. வேலை கிடைத்தாலும் உத்தரவாதம் எதுவும் கிடையாது. எந்நேரமும் சீட்டு கிழித்து வெளியில் அனுப்பலாம்.
30 வருடமாக அகதியாக இருந்தும் குடியுரிமையும் கிடையாது. வெளிநாடுகளுக்கும் போக முடியாது. இலங்கைக்கும் திரும்பி வர முடியாது.
இந்த நிலை இருந்தால் யார்தான் மெண்டல் ஆகமாட்டார்கள்? இப்போது எழும் கேள்வி என்னவெனில் ஒரு லட்சம் அகதிகளையும் மெண்டல் என்று தமிழக அரசு அடைத்து வைக்கப் போகிறதா?
இதைப் படிப்பவர்கள் தமிழக அரசும் ஊடகங்களும் ஏன் அக்கறை காட்டவில்லை என்று நினைக்கலாம். அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.
அவர்களது அக்கறை எல்லாம் பிக்பாசில் இருக்கும் லாஸ்லியா எப்படி காதலி இருக்கும் கவினை காதலிக்கலாம் என்பது பற்றியே இருக்கிறது.
என்னசெய்வது வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஒருபுறம் லாஸ்லியா ஆர்மி அமைக்கிறது மறுபுறம் அகதிகளை மெண்டலாக்கி மருத்துவமனையில் அடைக்கிறது.
ஆனால் ஈழத் தமிழ் தலைவர்களோ மோடி அரசு இந்துத் தமிழனுக்கு உதவும் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment