Friday, August 30, 2019

•எத்தனை அடக்குமுறைகளை மேற்கொண்டாலும்

•எத்தனை அடக்குமுறைகளை மேற்கொண்டாலும்
அத்தனையையும் தாண்டி பரவும் தோழர் தமிழரசன் புகழ்!
32 ஆண்டுகளுக்கு முன் அவரை கொன்று விட்டார்கள்.
ஆனால் இன்றும்கூட
அவரை நினைவு கூர்வதை தடுக்கிறார்கள்.
அவருக்கு சிலை வைக்க தடுக்கிறார்கள்
கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறார்கள்
புத்தகம் வெளியிட இடைஞ்சல் கொடுக்கிறார்கள்
போஸ்டர் ஒட்டினால் இரவிரவாக கிழிக்கிறார்கள்
அவர் பெயரை உச்சரிப்பவர்களை பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்
அதையும் மீறி செயற்பட்டால் கைது செய்து பொய் வழக்கு போடுகிறார்கள்
சிறையில் அடைத்தால் வழக்கை விரைந்து விசாரிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள்
சரி ஜாமீனாவது கொடுங்கள் என்றால் அதையும் மறுக்கிறார்கள்.
வேடிக்கை என்னவெனில் ஜாமீன் கோரினால் அதை தள்ளுபடி செய்வதாக ஒற்றைவரி எழுதுவதற்குகூட நீதிபதி 6 மாதம் எடுத்துக்கொள்கிறார்.
ஏன் இத்தனை அராஜகம்?
எதற்காக அரசு அவரைக் கண்டு அஞ்சுகிறது?
அவர் இறந்து 32 ஆண்டு ஆகியும்கூட அரசு ஏன் அவர் பெயரைக் கேட்டால் பதட்டமடைகிறது?
ஒரே ஒரு காரணம்தான்.
இந்த ஒற்றைப் பெயர் அணுகுண்டைவிட ஆபத்தானது என்று நினைக்கிறார்கள்.
இந்தப் பெயரே தங்களை தகர்த்து எறியப் போகிறது என்று உணர்கிறார்கள்.
உண்மைதான். இதோ பாருங்கள்
எத்தனை அடக்குமுறை இருந்தும் அதற்கு அஞ்சாமல்
இந்த 60 வயது வயதானவர்கூட அவர் பெயரை பட்டி தொட்டி எங்கும் பரப்புகின்றார் என்றால்
அதற்கு அந்த ஒற்றைப்பெயர்தானே காரணமாக இருக்கும்.
அதனால்தானே அந்தப் பெயருக்கு அரசு அஞ்சுகிறது.
ஆம். அந்த பெயர் “ தோழர்.தமிழரசன்”

No comments:

Post a Comment