Friday, August 30, 2019

ஜேவிபி யின் கொழும்பு கூட்டமும் கோத்தபாயாவின் கிளிநொச்சி கூட்டமும்

ஜேவிபி யின் கொழும்பு கூட்டமும்
கோத்தபாயாவின் கிளிநொச்சி கூட்டமும்
கொழும்பில் ஜேவிபி க்கு கூடிய கூட்டத்தைப் பார்த்த கோத்தபாயா ராஜபக்சா தானும் அதேபோல் ஒரு பிரமாண்டமான கூட்டத்தில் உரையாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
தன் தம்பியின் விருப்பத்தை அறிந்த மகிந்தராஜபக்சா “ தம்பி கவலைப்படாதே. இதைவிட அதிக கூட்டத்தில் அதுவும் வன்னியில் கிளிநொச்சியில் நீ பேசுவாய்” என்றார்.
மகிந்த கூறியமாதிரி கிளிநொச்சியில் மிகப் பெரிய கூட்டம். கோத்தபாயா ராஜபக்சாவுக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியுடன் மக்களைப் பார்த்து “ நான் ஜனாதிபதி ஆனதும் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
மக்கள் ஆரவாரத்துடன் தமக்கு மீன் பிடிக்க வள்ளம் வேண்டும் என்று கேட்டார்கள்.
இதைக் கேட்டதும் கோத்தபாயாராஜபக்சவுக்கு குழப்பமாகிவிட்டது. ஏனெனில் கிளிநொச்சியில் கடல் இல்லை. அப்புறம் எதற்காக மீன் பிடிக்க வள்ளம் கேட்கிறார்கள் என்று.
அப்போது மகிந்த ராஜபக்சா கோத்தபாயாவின் காதில் கூறினார் “ இதெல்லாம் அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட நம்ம ஆட்கள். நீயும் கண்டுக்காம எல்லாம் தரலாம் என்று கூறிவிடு” என்றார்.
அதற்கப்புறம் தனக்கு ஜேவிபி மாதிரி கூட்டம் வரவேண்டும் என்று கோத்பாயா கேட்பதில்லை என்று கூறுகின்றார்கள்.
(யாவும் கற்பனை இல்லை)

No comments:

Post a Comment