Friday, August 30, 2019

அம்பேத்காரும் கன்பொல்லை கிராம தியாகிகளும் !

•அம்பேத்காரும்
கன்பொல்லை கிராம தியாகிகளும் !
இதோ படத்தில் நீங்கள் பார்ப்பது ஒன்று வேதாரணியத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை. இன்னொன்று கரவெட்டியில் உடைக்கப்பட்ட தியாகிகள் சிலை.
அம்பேத்கார் சிலை பற்றி அறிந்த பலருக்கு இந்த கன்பொல்லை தியாகிகள் சிலை பற்றி தெரிந்திருக்காது. எனவே அவர்களுக்காக அது பற்றி ஒரு சின்ன அறிமுகம்.
யார் இந்த கன்பொல்லை கிராம தியாகிகள்?
1960 களில் இலங்கையில் நடந்த சாதி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள்.
“அடங்க மறு அத்துமீறு” என்று கூறி தமக்கு வோட்டு போடுங்கள் என்று கேட்டவர்கள் அல்ல இவர்கள்.
“அடிக்கு அடி . திருப்பி அடி” என்று கூறியது மட்டுமன்றி அதனை செயலில் காட்டியவர்கள்.
சாதீய தீண்டாமைக்கு எதிராக இவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதன் இரகசியம் இதுதான்.
சாதீய தீண்டாமைக்கு எதிராக இவர்கள் நடத்திய போராட்டத்தில் வெடி குண்டு வெடித்து மூவர் மரணமானார்கள்.
இவர்கள் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் வழிநடத்தப்பட்டவர்கள். இவர்களின் இந்த சிலைகளை திறந்து வைத்தவர் கம்யுனிஸட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன்.
இவர்களின் இந்த சிலை உடைக்கப்பட்டு பல வருடங்களாக அப்படியே இருக்கிறது.
பிரபாகரனின் உடைந்த வீட்டை வல்வெட்டித்துறை வந்து பார்வையிட்டார் திருமாவளவன்.
அந்த வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த உடைக்கப்பட்ட சிலை இருக்கிறது.
ஆனால் திருமாவளவனுக்கு ஏனோ இந்த உடைந்த சிலையை பார்வையிட வேண்டும் என்று தோன்றவில்லை.
அல்லது, வேதாரணியத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலைக்கு பதிலாக வெண்கலசிலை வைக்கப்படும் என்று திருமாவளவன் கூறியதுபோன்று கூறுவதற்கும் ஒரு தலைவர் ஈழத்தில் இல்லை.

No comments:

Post a Comment