Wednesday, September 30, 2020

தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்!

•தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்! ஓ! மரணித்த வீரனே! ஆங்கிலேய அரசை விரட்ட நீ குண்டெறிந்தபோது உன்னை “தியாகி” என்று அழைத்தவர்கள் இந்திய அரசை விரட்ட தமிழரசன் எறிந்தபோது அவரை “பயங்கரவாதி” என்கிறார்கள். நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது வெள்ளையர் ஆட்சி போயிற்று - ஆனால் கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது. இந்த கொள்ளையர் ஆட்சியில் கல்லெறியும் காஸ்மீர் சிறுவன் ஜிகாத் பயங்கரவாதி சதீஸ்கரில் ஆதிவாசி மாவோயிஸ்ட் பயங்கரவாதி தமிழகத்தில் ஈழ அகதிகள் புலிப் பயங்கரவாதிகள் தலைநகர் டில்லியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு அன்று முஸ்லிம்களும் சேர்ந்து சுதந்திர இந்தியாவுக்கு போராடினார்கள். இன்று முஸ்லிம்களை கொன்று குவித்தவர் மாண்புமிகு பிரதமர். வெள்ளையர் உன்னை பயங்கரவாதி என்றனர். ஆனால் சுதந்திர இந்தியா உன்னை தியாகி என்றது. இன்று கொள்ளையர் எம்மை பயங்கரவாதி என்கின்றனர். நாளைய விடுதலை எம்மை போராளிகள் என்றழைக்கும். தோழனே! நீ எறிந்த குண்டை கொடு கொள்ளையரை விரட்ட. குறிப்பு - இன்று தோழர் பகத் சிங் அவர்களின் பிறந்ததினம் ஆகும்.(28.09.1907) (இது ஒரு மீள்பதிவு)

No comments:

Post a Comment