Sunday, September 11, 2016

•தமிழன் சினம் கொள்வானா?

•தமிழன் சினம் கொள்வானா?
கர்நாடகாவில்,
தமிழ் நாளிதழ் தீயிட்டு கொளுத்தப்படுகிறது
தமிழ் சனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழர் வாகனங்கள் அடித்து நொருக்கப்படுகின்றன.
என்ன மயிருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்? என்று ஒரு நடிகை பகிரங்கமாக கேட்கிறார்.
சூடான மூத்திரம் தேவையா? என நக்கலாக கேட்கிறார்கள்.
இதனை கர்நாக அரசு தடுக்கவில்லை. பொலிஸ் வேடிக்கை பார்க்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில்,
கர்நாடகாவின் சொத்துகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
கர்நாடகாவிற்கு மின்சாரம் பாதுகாப்பாக அனுப்பப்படுகிறது.
அதுமட்டுமன்றி தண்ணீர் கேட்டு போராடுபவர்களை கைது செய்யப்படுகிறார்கள்.
கர்நாடகாவில் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று அங்குள்ள பி.ஜே.பி கட்சி போராடுகிறது.
பிரதர் மோடியோ காவிரிப் பிரச்சனையில் தலையிட முடியாது என்கிறார். இது மாநிலங்களின் உரிமை என்கிறார்.
இதே மோடிதான் பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்தபோது அதில் தலையிட்டு மாநில உரிமைக்கு எதிராக உச்ச நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பவர்.
எழுவர் விடுதலை விடயத்தில் தலையிட்ட மோடிக்கு காவிரி பிரச்சனையில் ஏன் தலையிட முடியாது?
இங்கு “தமிழக பி.ஜே.பி வேற. கர்நாடக பி.ஜே.பி வேற” என்று அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன் கூறுகிறார்
அப்படியென்றால் இதுவரை அகண்ட பாரதம் அண்டா பாரதம் என்று பேசி வந்தது எல்லாம் வெறும் கப்சா தானா?
மானமுள்ள தமிழன் யாராவது தமிழக பி.ஜே.பி யில் இருந்தால் இந் நேரம் பி.ஜே.பி கொடியை அறுத்து எறிந்திருப்பான்.
தமிழக உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய ஜெயா அம்மையார் தனது வழக்கு தீர்ப்பு வர இருப்பதால் மௌனமாக இருக்கிறார்.
தமிழர்களை திரட்டி போராட வேண்ட்டிய கலைஞர் கருணாநிதியோ தன் மகள் செல்வி குடும்பம் கர்நாடகாவில் இருப்பதால் ஜெயா அம்மையார் மீது குற்றம் கண்டு பிடித்து கவனத்தை திருப்புகிறார்.
கர்நாடகாவில் இருக்கும் செல்வி குடும்பம் மீது இதவரை ஒரு கல் கூட வீசப்படவில்லை என்பதன் ரகசியம் கலைஞரின் திசை திருப்பலை புரிந்துகொள்ள உதவும்.
கர்நாடகாவில் அனைத்து கட்சியும் ஒன்று திரண்டு தமிழர்களை எதிர்க்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது.
இந்த அநியாயங்களுக்கு எதிராக , இந்த துரோகங்களுக்கு எதிராக இனியாவது தமிழன் சினம் கொள்வானா?

No comments:

Post a Comment