•என்னத்தைச் சொல்ல?
எம் தமிழ் இனம் திருந்தவே மாட்டாதா?
எம் தமிழ் இனம் திருந்தவே மாட்டாதா?
கொழும்பில் மூவின மாணவர்களும் ஒன்று சேர்ந்து தமது உரிமைக்காக போராடியிருக்கிறார்கள்.
இலவசக் கல்வியை நிறுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக இம் மாணவர்கள் திரண்டு போராடியிருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலும் எமது தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டுள்ளார்கள்.
ஆனால்எ மது தமிழ் மக்கள் திரண்டது,
காணாமல் போனோரை கண்டு பிடிப்பதற்காக அல்ல
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்காக அல்ல
இடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்வதற்காக அல்ல
தமிழ் பகுதிகளில் நிகழும் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக அல்ல
எமது மக்கள் திரண்டது எல்லாம் நல்லுர் கோயில் தேர்த் திருவிழாவிற்காகவே!
இதைவிட கொடுமை என்னவெனில்
அவுஸ்ரேலியாவில் ஒரு வெள்ளை இன பெண் ஈழ தமிழ் அகதி ஒருவரின் வெளியேற்றத்தைத் தடுத்தி நிறுத்தியிருக்கிறார்.
அகதி அலுவலரான அவர் விமானத்தில் ஏறி எதிர்ப்பு தெரிவித்து அந்த தமிழ் அகதியின் வெளியேற்றத்தை தடுத்துள்ளார்.
இதற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இவருக்கு இரண்டு வருடங்கள் தண்டனை கிடைக்கக்கூடும்.
இவர் மீதான வழக்கு விசாரணை 02.09.16 யன்று வருகிறது. இந்த செய்தி எமது தமிழ் ஊடகங்களில் வரவில்லை.
அதேவேளை எமது தமிழ் ஊடகங்களில் இன்னொரு வெள்ளையின பெண் பற்றிய செய்தி இடம் பிடித்துள்ளது.
அந்த வெள்ளையின பெண் நல்லுர் கோயில் வந்து சாமி கும்பிட்டது எமது ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இலங்கையில் 6000 க்கு மேற்பட்ட இந்து கோயில்கள் உள்ளன. இதில் சுமார் 60000 ஆண்டவன்கள் இருக்ககூடும். இத்தனை சாமி இருந்தும் ஒரு சாமிகூட தமிழ் இன அழிவை தடுத்து நிறுத்தவில்லை.
நல்லுர் திருவிழாவிற்கு வெளி நாடுகளில் இருந்தும் தமிழர்கள் சென்றுள்ளனர். குறைந்தது 250 கோடி ரூபாவிற்கு மேல் செலவு செய்யப்படுகிறது.
இந்தப் பணத்தில்,
250 பாடசாலைக்கு கூரை போட்டிருக்க முடியும்.
500 குழாய் கிணறு போட்டுக் கொடுத்திருக்லாம்.
5000 கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கலாம்.
10000 போராளிக் குடும்பங்களுக்கு கொடுத்திருக்கலாம்.
விரும்பினால் இப்படி எத்தனையோ செய்யலாம்.
ஆனால் இதை சொல்லவும் செய்விக்கவும் யாரும் இல்லையே?
No comments:
Post a Comment