Sunday, September 11, 2016

•வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டில் வள்ளுவனுக்கு சிலை வைக்க மறுப்பு!

•வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டில்
வள்ளுவனுக்கு சிலை வைக்க மறுப்பு!
கங்கை கரையில் வள்ளுவன் சிலை உடைக்கப்பட்டவேளை, லண்டனில் , சிங்கப்பூரில், இலங்கை எல்லாம் வள்ளுவன் சிலை இருக்கும்போது வட இந்தியாவில் சிலை வைக்க முடியாதா என நாம் அனைவரும் கவலைப்பட்டோம்.
இப்போது தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் வள்ளுவர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிறுவியிருந்த சிலை இரவோடு இரவாக பொலிசார் மூலம் உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான் பகழ்கொண்ட தமிழ்நாடு என்று பாரதி பாடினான். பாரதி பாடிய அந்த தமிழ்நாட்டில்தான் வள்ளுவர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுக்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சோபன்பாபு தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழர்களுக்கோ அல்லது தமிழுக்கோ செய்தது என்ன?
நாம் அறிந்தவரையில் சோபன்பாபு செய்ததெல்லாம் நமது தமிழக முதல்வர் ஜெயா அம்மையாருடன் சில காலம் தாலி கட்டாமல் கணவனாக குடும்பம் நடத்தினார் என்பதே. அதற்காகத்தானா தமிழ்நாட்டில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது?
தமிழ்நாட்டில் தமிழ் அறிஞருக்கு சிலை வைக்க அனுமதி இல்லை. ஆனால் தமிழன் அமைதியாக இருக்கிறான்.
இதுவே கன்னட மாநிலத்தில் கன்னட அறிஞருக்கு நடந்திருந்தால் இந் நேரம் கர்நாடகா பற்றி எரிந்திருக்கும்.
இதுவே மாராட்டிய மாநிலத்தில் மாராட்டிய அறிஞருக்கு நடந்திருந்தால் பம்பாய் பற்றி எரிந்திருக்கும்.
ஆனால் தமிழ் நாட்டில் வள்ளுவருக்கு இந் நிலை ஏற்பட்ட பின்பும் தமிழன் அமைதியாக இருக்கிறான் எனில் தமிழன் அடிமையாக மட்டுமன்றி சுய உணர்வும் அற்ற நிலையில் இருக்கிறான்.
தமிழ்நாட்டில் தமிழன் சுய உணர்வு பெறுவது எப்போது?

No comments:

Post a Comment