Sunday, September 11, 2016

•நியாயம் கேட்பது தவறா?

•நியாயம் கேட்பது தவறா?
சென்னையில் ஒரு பெண் ரயில் நிலையத்தில் குத்திக் கொல்லப்பட்டார். அந்த செய்தி மறையும் முன்னரே கரூரில் இன்னொரு பெண் கட்டையால் அடித்து கொல்லப்பட்டார். இது தூத்துக்குடி, விழுப்புரம் என்று மாநிலம் முழுவதும் பரவலாக நடைபெறுகிறது.
அதேவேளை சென்னையில் 160 இடங்களில் பிள்ளையார் சிலை வைக்கப்படும் என்றும் அதற்கு துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் முதலமைச்சராக உள்ள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் கடலில் கரைக்கவுள்ள மண் பிள்ளையாருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பிள்ளையாருக்கு ஏன் பொலிஸ் பாதுகாப்பு? என்று நான் பகுத்தறிவுக் கேள்வி கேட்க விரும்பவில்லை. மாறாக பிள்ளையாருக்கு கொடுப்பதுபோல் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தால் என்ன? என்றே கேட்கிறேன்.
வாசாத்தி என்ற கிராமத்தில் 18 மலைவாழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் 7 பொலிசாருக்கு தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளை நாயை தூக்கி எறிந்த குற்றத்திற்காக இரண்டு மருத்துவபீட மாணவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு எனது கேள்வி என்னவென்றால், இந்தியாவில் மலைவாழ் மக்களை விட நாயின் மதிப்பு அதிகமா?
நான் இவ்வாறு மனிதத்திற்காக நியாயம் கேட்பது சில வேளை நாய்களுக்கு கோபம் வரலாம். ஆனால் தங்களை மனிதர்கள் என்று 4றுமு; சிலருக்கும் என் கொபம் வருகிறது என்று புரியவில்லை.
குறிப்பு- தயவு செய்து தங்களை மனிதத்தை நேசிப்பவர்கள் என கருதுவோர் மட்டும் எனது இந்த பதிவிற்கு கருத்து பகிரவும்.

No comments:

Post a Comment