Sunday, September 11, 2016

•லண்டனில் நடைபெற்ற மாலன் உடனான சந்திப்பு

•லண்டனில் நடைபெற்ற மாலன் உடனான சந்திப்பு
கடந்த 03.09.16 யன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் எழுத்தாளர் மற்றும் ஊடக ஆசிரியரான மாலன் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
பௌசர் தலைமையில் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் இவ் நிகழ்வு நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் மாலன் குறித்த அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
மாலன் அவர்கள் தனது உரையில் காமன்வெல்த் நாடுகளுக்கிடையில் புலம்பெயர் இலக்கியத்திற்கான ஒரு அமைப்பின் அவசியம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார்.
இறுதியாக பார்வையாளர்களின் கேள்விகளும் அவர் பதில் அளித்தார். எதிர்வரும் 10.09.16 யன்று லண்டனில் ஆச்வே என்னும் இடத்தில் நடைபெறும் நிகழ்வில் அவர் பங்குபற்றும் விபரமும் அறிவிக்கப்பட்டது.
1994ம் ஆண்டு மாலன் அவர்கள் தினமணி பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது சமூக விழிப்புணர்வு ஊர்வலங்களில் மாணவர்களை பயன்படுத்தலாமா என்று ஒரு கட்டுரை போட்டி நடத்தினார்.
அப்போது சேலத்தில் ஒரு அமைச்சரை வரவேற்க பல மாணவர்கள் பல மணி நேரம் வெய்யிலில் காக்க வைத்ததால் அவர்கள் மயங்கி விழுந்த செய்தி வெளிவந்த தருணம் அது.
அதனால் போட்டியில் பங்கு பற்றிய பெரும்பாலோனோர் அச் சம்பவத்தை உதாரணம் காட்டி மாணவர்களை சமூக விழிப்புணர்வு ஊர்வலங்களில் பங்கு பற்ற வைக்கக்கூடாது என்றே கட்டுரை எழுதியிருந்தனர்.
அப்போது நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தேன். நான் மாணவர்கள் இன்னும் அதிகமாக சமூக விழிப்புணர்வில் பயன்படுத்தப்பட வேண்டும் என ரஸ்சியா சீனா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி எழுதியிருந்தேன்.
மாலன் அவர்கள் எனது கட்டுரைக்கு முதல் பரிசு 500 ரூபா அறிவித்து அதனை தினமணியிலும் பிரசுரம் செய்திருந்தார்.
நான் ஒரு ஈழத் தமிழன் என்பதையும் நான் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிந்திருந்தும் அந்த வேளையில் தினமணியில் எனக்கு முதற் பரிசை மாலன் தந்தது அவர் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த ஆதரவு மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
அவர் தனது பதவிக்காலத்தில் பல ஈழத் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியிருக்கின்றார் என்பதையும் நேற்றைய கூட்டத்தில் அவரது உரையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.
குறிப்பு- அவர் அறிவித்த பரிசுத் தொகையான 500 ரூபா இதுவரை என் கைக்கு வந்து சேரவில்லை !

No comments:

Post a Comment