Sunday, September 11, 2016

•போங்கடா, நீங்களும் உங்கட நியாயமும்!

•போங்கடா, நீங்களும் உங்கட நியாயமும்!
இந்தியாவில் 2006 ஆண்டு முதல் 2013 ஆண்டுவரை முதலாளிகளுக்கும் ஆடம்பர பொருட்களுக்கும் வழங்கப்பட்ட வரிச் சலுகை 39 லட்சம் கோடி ரூபா.
அதாவது ஆண்டு ஒன்றுக்கு சராசரி 5 லட்சம் கோடி ரூபா வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை,
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்க தேவையான தொகை 32 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அத்தியாவசிய உணவு வழங்க தேவையான தொகை 85 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவச அடிப்படைக் கல்வி வழங்க தேவையான தொகை 22 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குடி தண்ணீர் வழங்க தேவையான தொகை 1 லட்சம் கோடி ரூபா மட்டுமே.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கழிப்பறை வசதி வழங்க தேவையான தொகை 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே.
அதாவது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உனவு, கல்வி, சுகாதாரம், தண்ணீர், கழிப்பறை வசதி வழங்க தேவையான மொத்த தொகை 3லட்சத்திற்கு 59 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே.
ஒரு வருடம் வரியை ஒழுங்காக அறவிட்டிருந்தாலே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவச கல்வி சுகாதாரம், உணவு, தண்ணீர், கழிப்பறை வசதி வழங்கியிருக்க முடியும்.
ஆனால் இந்திய அரசு தொடர்ந்தும் முதலாளிகளுக்கே சலுகைகளும், கடன்களும் வழங்குகிறதே யொழிய ஏழை மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்வதில்லை.
இந்திய அரசு விரும்பினால் நதிகளை இணைத்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியும். ஆனால் அரசு அதனை தீர்க்காமல் வேண்டுமென்றே மக்களை மோதவிடுகிறது.
கங்கை நதியை காவிரியுடன் இணைத்தால் காவிரி தண்ணீருக்காக தமிழக மக்களும் கன்னட மக்களும் மோதும் நிலை இருக்காது.
எல்லா நதிகளையும் இணைக்கக்கூடிய வசதியும் வாய்ப்பும் இந்தியாவிற்கு நிறைய உண்டு.
ஆனால் மோடி அரசு அணு உலைகளையும் நீர்மூழ்கி கப்பல்களையும் வாங்குவதற்கே கோடிக் கணக்கான ரூபாக்களை ஒதுக்கிறது.
1960 களிலேயே சீனா தன் நதிகள் எல்லாவற்றையும் இணைத்து தண்ணீர் பஞ்சத்தை போக்கியுள்ளது. ஆனால் இந்தியா 2016 லும்கூட அது பற்றி முயற்சி செய்யாமல் இருக்கிறது.
இந்தியாவில் ராணுவம் இருக்கிறது. அது காஸ்மீரில் மக்களை கொல்கிறது. ஆனால் கர்நாடகாவில் அது சும்மா இருக்கிறது.
இந்தியாவில் துணைப்படை இருக்கிறது. அது சதீஸ்கரில் ஆதிவாசிகளை கொல்கிறது. ஆனால் கர்நாடகாவில் அது மௌனமாக இருக்கிறது.
ராணுவம் , பொலிஸ், துணைப்படை எல்லாம் இருந்தும் கர்நாடகாவில் தமிழன் தாக்கப்படுகிறான். யாரும் தடுக்கவில்லை.
போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!

No comments:

Post a Comment