Sunday, January 31, 2016

•சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட அகதிகளின் குறைகள் தீர்க்கப்படுமா?

•சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட அகதிகளின் குறைகள் தீர்க்கப்படுமா?
தேர்தல் நெருங்கிறது. மக்களின் குறைகளை தீர்க்க தொலைபேசி அழைப்பு மையத்தை ஜெயா அம்மையாரின் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதை நம்பி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் ஜெயா அம்மையாரிடம் தம் குறைகளை கூறினால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை.
அகதிகள்- வணக்கம் அம்மா! மாடுகளைக்கூட துன்புறுத்தக்கூடாது என்று கூறும் இந்தியாவில் எங்களை அடைத்துவைத்து துன்புறுத்துவது நியாயமா?
ஜெயா அம்மையார்- மாடுகளுக்காக குரல் கொடுக்க விலங்குகள் நல வாரியம் உள்ளது. அதுகளுக்காக 50 கோடி ருபா செலவு செய்து வழக்கு பேச பீட்டா அமைப்பு உள்ளது. உங்களுக்காக குரல் கொடுக்க யார் உள்ளார்கள்?
அகதிகள்- யானைகளுக்குகூட இரக்கப்பட்டு வருடம்தோறும் சிறப்புமுகாம் நடத்துகிறீர்கள். ஆனால் மனிதர்களான எங்கள் மீது கொஞ்சம் இரக்கம் காட்டக்கூடாதா?
ஜெயா அம்மையார்- நீங்கள் அகதி தமிழனாக இங்கு வந்ததைவிட தமிழ்நாட்டில் ஒரு யானைக் குட்டியாக பிறந்திருக்கலாம். நீங்கள் தமிழனாகவே பிறந்திருக்க கூடாது.
அகதிகள்- ஈழத்தாய் என்ற போற்றப்படும் நீங்களே இப்படி கூறலாமா? ஈழத் தமிழர்களுக்காக சட்டசபையில் தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்களே அம்மா?
ஜெயா அம்மையார்- தேர்தலுக்காக ஈழ அரசியலை நாம் பேசுவோம். அதையெல்லாம் உண்மை என்று உங்களை யார் நம்பச் சொன்னது?
அகதிகள்- சரி அம்மா. தமிழக அரசியல்வாதிகளை நம்பியது தப்புதான். இப்போது தொலைபேசியில் குறைகளை சொன்னால் தீhத்துவைப்போம் என்று நீங்கள்தானே அறிவித்துள்ளீர்கள்?
ஜெயா அம்மையார்- அது உண்மைதான். ஆனால் உங்களுக்குத்தான் வோட்டு இல்லையே? உங்கள் குறைகளை தீர்த்துவைப்பதால் எனக்கு என்ன லாபம்?
முதல்வர் ஜெயா அம்மையார் தொலைபேசியை கட் பண்ணியதைக்கூட தெரியாமல் அகதிகள் தொடர்ந்தும் தமது குறைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment