Sunday, January 31, 2016

திலீபன்களும் பிரபாகரன்களும் உருவாகிறார்களா? உருவாக்கப்படுகிறார்களா?

•திலீபன்களும் பிரபாகரன்களும்
உருவாகிறார்களா? உருவாக்கப்படுகிறார்களா?
முன்னாள் வெளியுறவு செயலர் நாராயணை பிரபாகரன் என்பவர் செருப்பால் அடித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அப்போது பிரபாகரனை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும் என இந்து நாளிதழ் கேட்டுக் கொண்டது.
திலீபன் என்பர் தேசியக்கொடியை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவரை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும் என தற்பொது சிலர் கோரி வருகிறார்கள்.
தமது இனத்தை பற்றி சிந்தித்தவர்களை தண்டிக்க வேண்டும் எனக் கோரும் இனம் உலகில் தமிழ் இனம் மட்டுமே இருக்கும் என நம்புகிறேன்.
இங்கு எனது கேள்வி என்னவெனில்,
இதுவரை யாரையும் தாக்காத பிரபாகரன் எதற்காக நாராயணை தாக்கினார்?
இதுவரை தேசிய கொடியை அவமதிக்காத திலீபன் தற்போது ஏன் எரித்தார்?
இவர்களை சிறையில் அடைத்து தண்டிப்பதன் மூலம் இவற்றை தடுக்க முடியுமா?
திலீபன் தான் ஏன் கொடியை எரித்தேன் என்பதை தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இதற்காக மரண தண்டனையும் பெறுவதற்கு தயார் என்றும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (புலிகளின்) திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது இந்திய தூதர் தீட்சித் கௌரவம் பாராமல் சென்று பேசியிருந்தால் திலீபன் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். பல்லாயிரம் தமிழ் மக்கள் இந்திய படையினரால் கொல்லப்பட்ட அவலத்தையும் தவிர்த்திருக்கலாம்.
அத்துடன் இலங்கை அரசுகள் விட்ட தவறுகளே தமிழ்மக்கள் மத்தியில் (புலிகளின் தலைவா); பிரபாகரன்கள் உருவாகக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா கூறியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசுபோல் இந்திய அரசு செய்யும் தவறுகளே தமிழகத்தில் பிரபாகரன்களும் திலீபன்களும் இன்று உருவாக காரணமாக உள்ளன.
திலீபன், பிரபாகரன்களை சிறையில் அடைப்பதன் மூலம் திலீபன், பிரபாகரன்கள் உருவாவதை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.
பிரபாகரன் நாராயணை செருப்பால் அடித்தது வன்முறை என்றால் அந்த வன்முறை உருவாவதற்கு இந்திய அரசே காரணமாகும்.
திலீபன் தேசியகொடியை எரித்தது தேசத் துரோகம் என்றால் அந்த தேசத் துரோகம் உருவாவதற்கு இந்திய அரசே காரணமாகும்.
எனவே வன்முறையும் தேசத்துரோகமும் உருவாகாமல் தடுக்கப்பட வேண்டுமென்றால், தவிர்க்கப்பட வேண்டும் என்றால் இதனை உருவாக்கும் இந்திய அரசே தண்டிக்கப்பட வேண்டும்.
பிரபாகரனும் திலீபனும்,
60 கொடி ரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்து 4 வருட தண்டனை பெற்றவர்கள் அல்லர்.
2ஜி ஊழல் செய்து பல கோடி ரூபாக்களை சுருட்டியவர்கள் அல்லர்
மருத்துவகல்லூரி நடத்தி 3 மாணவிகளை கொலை செய்தவர்கள் அல்லர்
குவாரிகளில் மணற்கொள்ளை செய்த முதலாளிகள் அல்லர்
இவர்கள் தமிழ் இனத்திற்காக சிந்தித்த உணர்வாளர்கள்.
கொலை செய்தவர்கள,கொள்ளையடித்தவர்கள், ஊழல் செய்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரியும்போது அவர்களை எல்லாம் சிறையில் அடைக்க வேண்டும் எனக் கோராதவர்கள், தமது இனத்திற்காக சிந்தித்த உணர்வாளர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனக் கோருவது என்ன நியாயம்?
திலீபன்களும் பிரபாகரன்களும் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்.
அவர்கள் தமது தமிழ் இனத்தின் மீது பற்று கொண்ட உணர்வாளர்கள்.
திலீபன்களும் பிரபாகரன்களும் தாங்களாக உருவாவதில்லை.
இந்திய அரசின் தவறுகளால் அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment