Sunday, January 31, 2016

•இளைஞர்கள் போராட துடிக்கிறார்கள் ஆனால் தலைவர்கள்தான் தயங்குகிறார்கள்.

•இளைஞர்கள் போராட துடிக்கிறார்கள்
ஆனால் தலைவர்கள்தான் தயங்குகிறார்கள்.
இன்று முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஒரு இளைஞர் இந்திய தேசியக் கொடியை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
தேசியக் கொடியை எரிப்பது தேவைதானா? என்று சிலர் கேட்பார்கள்
தேசியகொடியை எரிப்பது பெரிய வீரமா? என்று இன்னும் சிலர் கேட்பார்கள்
தேசிய கொடியை எரித்தவன் தமிழனா இல்லையா என வேறு சிலர் ஆராய்வார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. பற்றி எரியப் போகும் காட்டுத் தீக்கான முதல் நெருப்பு இது.
நேற்று ஒரு இளைஞன் நாராயணுக்கு செருப்பால் அடித்தான்.
இன்று ஒரு இளைஞன் தேசிய கொடியை எரித்துள்ளான்.
இந்த இளைஞன் கைது செய்யப்படலாம்.
தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்படலாம்.
ஆனால் என்ன செய்தாலும் இனி இந்த நெருப்பை இந்திய அரசால் அணைக்க முடியாது.
குமுறி வெடிக்கும் தமிழக இளைஞர்களின் உணர்வை அடக்க முடியாது.
இந்த சம்பவத்தை அறிந்தபோது ஆரம்ப காலங்களில் நாங்கள் இலங்கை தேசியகொடியை எரித்தது நினைவுக்கு வருகிறது.
பருத்திதுறை நீதிமன்றத்தில் பறந்த தேசியைக்கொடியை அறுத்து எறிந்தமைக்காக பொலிசாரிடம் அடிவாங்கியது நினைவுக்கு வருகிறது.
ஆரம்பத்தில் நாம் கொடியை எரித்து எப்படி இலங்கை அரசுக்கு எதிரான போராட்டமாக வளர்ந்தோமோ அதேபோன்று இந்திய அரசுக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்திற்கு இந்த எரிப்புகள் நிச்சயம் வழிகோலும்.

No comments:

Post a Comment