Thursday, August 31, 2017

•இலங்கையின் சட்டத்தை விட

•இலங்கையின் சட்டத்தை விட
இலங்கையின் நீதி நியாத்தை விட
அமைச்சர் விஜயகலாவின் பணம் வலிமையானது!
இன்று இலங்கை மக்கள் முன் கேள்வி என்னவெனில் “அமைச்சர் விஜயகலா சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?” என்பதே.
பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். ஆனால் விஜயகலா வின் பணம் ரணிலையும் தாண்டி மைத்திரி வரை பாய்ந்துள்ளதா?
அமைச்சர் விஜயகலா கேட்டுக்கொண்டதன் பேரிலேயே குற்றவாளி சுவிஸ்குமாரை தப்ப வைத்தேன் என பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறியுள்ளார்.
அமைச்சர் விஜயகலாதான் தன்னை தப்ப வைத்ததாக சம்பந்தப்பட்ட குற்றவாளி சுவிஸ்குமாரே நீதிமன்றத்தில் சாட்சியம் கூறியுள்ளார்.
அமைச்சர் விஜயகலாவை விசாரித்து வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
ஆனால் அமைச்சர் விஜயகலா இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆகக் குறைந்தது வழக்கு முடியும்வரையாவது அவர் பதவியை ராஜினாமா செய்யும்படி பிரதமர் கோரவில்லை.
அதுமட்டுமல்ல எந்தவித விசாரணையும் செய்யப்படாமலேயே அமைச்சர் விஜயகலா குற்றமற்றவர் என்று பொலிஸ் கூறி வருகிறது.
நாளை ஒருவேளை விஜயகலாவே வந்து நான்தான் தப்ப வைத்தேன் என்று கூறினாலும்கூட அப்பவும் பொலிஸ் அவரை குற்றமற்றவர் என்றுதான் கூறும்போல் உள்ளது.
இந்த மகிளிர் விவகார அமைச்சரான விஜயகலாவை கைது செய்யும்படி பல மகிளிர் கொழும்பில் உள்ள ஜ.நா அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் ஒரு மகிளிர் விவகார அமைச்ரை கைது செய்யும்படி மகிளிரே ஜ.நா அலுவலதில் கோருவது இதுவே முதன்முறை.
ஆனால் இது குறித்து பிரமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எந்த கவலையும் இல்லை.
ஏன் இது குறித்து நல்லாட்சி அரசுக்கோ எந்த கூச்சமும் இல்லை.
ஏனென்றால் அமைச்சர் விஜயகலாவின் பணம் மிகவும் வலிமையானது!
பாவம் மாணவி வித்யா. இலங்கையில் நீதி என்பது பணத்தால் வாங்கப்படுவது என்பது அவள் அறிந்திருக்கமாட்டாள்!

No comments:

Post a Comment