Monday, August 14, 2017

•இந்தியாவில் மாட்டுக்கு இருக்கும் மதிப்பு குழந்தைகளுக்கு இல்லையா?

•இந்தியாவில்
மாட்டுக்கு இருக்கும் மதிப்பு
குழந்தைகளுக்கு இல்லையா?
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 70 குழந்தைகள் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிகிச்சைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர் இல்லாததால் இந்த குழந்தைகள் மரணம் எற்பட்டதாக கூறுகிறார்கள்.
மாடுகளுக்கு சிகிச்சைக்காக அம்புலன்ஸ் சேவை ஏற்படுத்திய அரசு குழந்தைகளுக்கு ஏன் சிலிண்டர் ஏற்பாடு செய்யவில்லை?
மாட்டைக் கொன்றதாக கூறி பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இதே இந்தியாவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்கள்
அவ்வாறு மாட்டுக்காக முஸ்லிம் இளைஞர்களைக் கொன்றவர்கள் இந்த குழந்தைகளைக் கொன்ற அரசை ஏன் அடித்துக் கொல்லவில்லை?
இவர்கள் எல்லோருக்கும் மனிதக் குழந்தைகளைவிட மாடுகள்தான் மதிப்பு மிக்கதாக அல்லது முக்கியமாக தோன்றுகிறதா?
இங்கு மிகவும் கவலைக்குரிய இன்னொரு விடயம் இவற்றுக்கு இந்திய நீதிமன்றத்திலும் நிPதி கிடைக்காமல் இருப்பதே.
இந்த குழந்தைகளின் மரணங்களுக்கு காரணமானவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினாலும் நீதி கிடைக்கப்போவதில்லை.
தமிழகத்தில் கும்பகோணத்தில் 94 குழந்தைகள் மரணமடையக் காரணமானவர்கள் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அதேபோல் நாளை இந்த 70 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானவர்களையும் இந்திய நீதிமன்றம் விடுதலை செய்துவிடும்.
இவர்களைப் பொறுத்தவரையில் 70 மாடுகள் செத்திருந்தால் மட்டுமே கவலைப்படுவார்கள்.
பாவம் இந்திய மக்கள்!

No comments:

Post a Comment