Monday, August 14, 2017

•லண்டனில் நடைபெற்ற “புதிய சொல்” இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும்

•லண்டனில் நடைபெற்ற “புதிய சொல்” இதழ்
அறிமுகமும் கலந்துரையாடலும்
கடந்த சனியன்று (29.07.2017) மாலை 4 மணியளவில் லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் புதிய சொல் இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும் விம்பம் அமைப்பால் நடத்தப்பட்டது.
ஈழத்தில் இருந்து வெளிவரும் சிற்றிதழான “புதியசொல்” குறித்து நடைபெற்ற அறிமுகமும் கலந்துரையாடலும் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
முதலில் கோகுலரூபன் வரவேற்புரை நிகழ்தினார். அவர் கேட்டுக்கொண்டபடி அண்மையில் அகால மரணமடைந்த இலக்கிய ஆர்வலர் யேசுதாசன் அவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து கோகுலன் ரூபன் தோழர் வேலுவை தலைமை தாங்க அழைத்தார். மு. நித்தியானந்தன் அவர்கள் சுகயீனம் காரணமாக வரமுடியவில்லை என்றும் அதனால் தான் தலைமைதாங்க வேண்டி ஏற்பட்டது என வேலு குறிப்பிட்டார்.
தோழர் வேலுவின் தலைமையுரையை அடுத்து வாசன் பேச அழைக்கப்பட்டார். வாசன் ஒரு ஆழமான வாசிப்பாளர் என்பது அறிந்த விடயம்தான். ஆனால் அவர் இதுவரை வெளிவந்த அனைத்து புதியசொல் இதழ்களையும் தேடி வாசித்திருக்கிறார் என்பது அச்சரியமாக இருந்தது.
வாசன் தனது உரையில் இதுவரை வெளிவந்த புதியசொல் இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பற்றி ஒரு நல்ல விரிவான பார்வையை தந்திருந்தார்.
அடுத்து பௌசர் பேச அழைக்கப்பட்டிருந்தார். பௌசர் தனது உரையில் புதியசொல் இதழ்களில் இடம்பெற்ற ஆசிரியர் தலையங்கங்கள் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் தனது எதுவரை, மூன்றாவது மனிதன் சிற்றிதழ்கள் அனுபவங்களினூடாக புதியசொல் ஆசிரியர் உரைகள் பற்றி பேசியது சிறப்பாக இருந்தது.
அடுத்து கௌரிபரா பேச அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில் கடைசியாக வந்த புதிய சொல் இதழ் பற்றி குறிப்பிட்டார். இதழைப் பாராட்டிய அதேநேரத்தில் குறிப்பாக இதழ் அட்டைப்படம் வல்கராக இருப்பதாகவும் வீட்டில் குழந்தைகள் முன்வைத்துப் படிக்க சங்கடமாக இருக்கிறது என்றும் கூறினார்.
அடுத்து முத்து அவர்கள் பேச அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில் வேறு சில இதழ்களுடன் புதியசொல் இதழை ஒப்பிட்டுப் பேசினார். தனக்கு 1983- 1990 காலகட்டம் திரும்பி வருவதுபோல் தோன்றுவதாக கூறினார்.
இறுதியாக “விம்பம்” ராஜா பேச அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில் புதியசொல் இதழ்களின் அட்டைப்படம் மற்றும் போட்டோக்கள் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் தனது உரையில் தான் மூன்றாவது தலைமுறையினருடன் ஓவியப் பணியில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.
1990களில் எக்சில், உயிர்நிழல் சஞ்சிகைகளுக்கு தான் அட்டைப்படம் தயாரித்த அனுபவங்களை கூறியதோடு அந்த இதழ்களையும் கொண்டுவந்து சபையில் காட்டினார்.
இறுதியாக சபையில் இருந்தவர்களின் கலந்துரையாடலுடன் நிகழ்வு முடிவுற்றது.
குறிப்பு-
அண்மைக் காலத்தில் லண்டனில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் மிகவும் காத்திரமான ஓர் நிகழ்வாக இது இருந்தது.
பொதுவாக நூலைப் படிக்காமலே வந்து நூல் அய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இந்த காலத்தில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பேச்சாளர்களும் உண்மையாகவே சிறந்த தயாரிப்புகளுடன் வந்து உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

No comments:

Post a Comment