Thursday, August 31, 2017

ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரம் வரை அல்ல

•ஓடினேன் ஓடினேன்
வாழ்க்கையின் ஓரம் வரை அல்ல
கனடாவின் ரொறன்ரோ நகர்வரை!
மாணவி வித்யா கொலை வழக்கு என்னை துரத்துகிறது
ஓடினேன் ஓடினேன் கனடா ரொறன்ரோவுக்கு ஓடினேன்
கிளிநொச்சி சென்றேன் அங்கே காணாமல் போன உறவுகள் 160 நாட்களுக்கு மேலாக போராடுவதாக கூறினார்கள்.
கேப்பாப்பிலவு சென்றேன். அங்கே மக்கள் தமது காணிக்காக 175 நாட்களாக போராடுவதாக கூறினார்கள்.
இரணைதீவு சென்றேன். அங்கும் மக்கள் தமது காணிக்காக போராடுவதாக கூறினார்கள்.
கொழும்பு சென்றேன். அங்கு சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாக கூறினார்கள்.
நிம்மதியாக பவள விழா கொண்டாட முடியவில்லை.
சந்தோசமாக இந்திய தூதுவரின் விருந்தை உண்ண முடியவில்லை
இது நியாயமா என கத்தினேன் கதறினேன்.
பதில் வந்தது சுமந்திரனிடமிருந்து. இதுதான் நல்லாட்சி என்று
நாலே வருடம்தான் சிறை சென்றேன். நாலு தடவை எம்.பி யாகி விட்டேன்.
அடுத்த தடவை என்ன சொல்லி எம்.பி யாகிறது என்று தெரியவில்லை.
கனடாக்காரன்களைத்தான் நம்பியிருக்கிறேன்.
போராட்டம் வெடிக்கும் என்று அறிக்கை விட்டால்
பத்திரிகைக்காரனே கிண்டலாக சிரிக்கிறான்
என்ன செய்வது என்று தெரியவில்லையே?
உங்கள்
வெடிகுண்டு முருகேசன்
மாவை சேனாதிராசா

No comments:

Post a Comment