Monday, April 29, 2019

•இந்திய அரசு இப்பவாவது இந்த அகதிகள் மீது இரங்குமா?

•இந்திய அரசு
இப்பவாவது இந்த அகதிகள் மீது இரங்குமா?
சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகளும் இந்துக்கள்தான். ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள் மீது இரக்கம் காட்டும் இந்திய அரசு இவர்கள் மீது இரக்கம் காட்ட மறுக்கிறது. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு இந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து அகதிகளும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த அகதிகள் மட்டும் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைக்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இந்தியா ஜனநாயகநாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த அகதிகளை நீதிமன்றம் விடுதலை செய்தும் இந்திய அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
அகதிகள் விரும்பினால் அவர்கள் தம் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இவ் அகதிகள் விரும்பியும் இந்திய அரசு அனுமதி வழங்காமல் அடைத்து வைத்திருக்கிறது. எனெனில் இவர்கள் தமிழர்கள்.
யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனாலும் இவர்களை வெளியில் விட்டால் இந்திய அமைதிக்கு ஆபத்தாம் என்று இந்திய அரசு கூறுகிறது. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இவர்கள் வேறு வழியின்றி உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசு மட்டுமல்ல அதிகாரிகள் கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இலங்கை அரசுகூட இந்தியாவில் சிங்களவர்கள் கைது செய்யப்பட்டால் உடனே தலையிட்டு அவர்களை விடுதலை செய்விக்கிறது. ஆனால் இவர்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இப்போது தேர்தல் நேரம். எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத் தமிழர் நலன் வலியுறுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். ஆனால் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்கள் நலன் குறித்து எதுவும் கூறவில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
ஈழத்தில் இந்திய தூதுவர் 20 காந்தி சிலைகளை நிறுவுகிறார். அவரிடம்கூட யாருமே அகிம்சை வழியில் போராடும் இந்த அகதிகள் பற்றி எதுவும் கேட்பதில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
அகதியாக பிறப்பதுகூட குற்றமில்லை. ஆனால் இந்தியாவில் தமிழராய் இருப்பது பெரிய பாவம். இதையே இந்திய அரசு எமக்கு கூறுகிறது.

No comments:

Post a Comment