Monday, April 29, 2019

•மதம் மனிதனை மிருகமாக்கிறதா?

•மதம் மனிதனை மிருகமாக்கிறதா?
மதம் மனிதனை மிருகமாக்கும் என்றார் தந்தை பெரியார். அது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது அண்மைய குண்டு வெடிப்பு.
குண்டு வைத்தவர் ஒருவர் பெண். இன்னொருவர் பட்டதாரி. இருவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களால் எப்படி இத்தனை குழந்தைகளை கொஞ்சம்கூட இரக்கமின்றி கொல்ல முடிந்தது?
தமக்கு எந்த தீங்கும் செய்யாத இந்த குழந்தைகளை இரக்கமின்றி குண்டு வீசிக் கொன்றவர்களை “மிருகங்கள்” என்று அழைப்பதே பொருத்தமானது.
மதம் யானைக்கும் வெறி நாய்க்குமே வரும் என்று மதவெறி குறித்து நடிகர் எம்.ஆர்.ராதா சரியாகவே கூறியிருக்கின்றார்.
இந்த வெறியர்கள் இப்படி செய்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்றும் அங்கு தமக்கு எட்டு மனைவியரை கடவுள் தருவார் என்றும் நம்புகிறார்கள்.
எனவே இப்படியான கருத்து இருக்கும்வரை இஸ்லாமிய சமூகத்தில் இப்படியான தற்கொலைதாரிகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கப் போகிறார்கள்.
அதுமட்டுமல்ல பௌத்த மத அடிப்படைவாதிகள் , கிருத்தவமத அடிப்படைவாதிகள், இந்துமத அடிப்படைவாதிகள் இருக்கும்வரை இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் இருக்கத்தான் போகிறார்கள்.
எனவே இன்னொரு குண்டு வெடிக்கக்கூடாது என்றால் இன்னொரு குழந்தை இதேபோல் மரணிக்க கூடாது என்றால் அனைத்து மத அடிப்படைவாதிகளையும் ஒழிக்க வேண்டும்.
ஆனால் இதை அரசுகள் ஒருபோதும் செய்ய முன்வராது. ஏனென்றால் இன்று மதம் என்பதும் ஒரு பிசினஸ் போல் ஆகிவிட்டது. அதனால்தான் காப்ரேட் கம்பனிகளால் மதம் அரவணைக்கப்பட்டு வருகிறது.
மதங்களை எதிர்த்தே முதலாளித்தவம் தோன்றியது. ஆனால் இன்று முதலாளித்துவத்தின் இருப்பிற்கு மதங்கள் துணை புரிகின்றன. அதனால்தான் மதங்கள் அரசுகளால் பேணி பராமரிக்கப்படுகின்றன.
அதனால்தான் “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்று தோழர் லெனின் கூறினார்.

No comments:

Post a Comment