Thursday, February 15, 2024

புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்ட முயன்றனர்

புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்ட முயன்றனர் எனக்கூறி திருச்சி சிறப்புமுகாமில் இருந்த சிலர் மீது இந்த NIA யினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த சிலர் தாம் கொழும்பு நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் தாம் ஜனாதிபதி ரணில் ஆதரவாளர்கள் என்றும் தமக்கும் புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இப்போது சாந்தன் உட்பட சிறப்புமுகாமில் இருப்பவர்களை விடுதலை செய்யுமாறு கோரி நாளை திருச்சியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர். எனவே அதை தடுப்பதற்காக நாம் தமிழர் கட்சியினருக்கு அச்சத்தையும் நெருக்கடியையும் கொடுப்பதற்காகவே இந்த NIA சோதனை நடைபெற்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் மகள் துவாரகா இந்திய அரசின் ஆதரவோடு தமிழீழத்திற்காக போராட வருகிறாள் என்று கவிஞர் காசி அனந்தன் கவிதை பாடுகிறார். ஆனால் அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அவர் வீட்டில் இந்த NIA யினர் சோதனை செய்வதில்லை. ஏனெனில் காசி அனந்தன் இந்த சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதில்லை. சிறப்புமுகாமை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்ய காவல்துறை அனுமதி அளிப்பதில்லை. மீறி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது. அதையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் NIA சோதனை மிரட்டல்.

No comments:

Post a Comment