Thursday, February 15, 2024

நானும் நண்பர் சபாவும்

நானும் நண்பர் சபாவும் கம்போடியாவில் இருந்தபோது(1998ல்) ஒரு நாள் வீதியோரத்தில் முருங்கை மரம் ஒன்றைக் கண்டோம். அதில் நிறைய முருங்கைக்காய்கள் காய்த்து தொங்கிக்கொண்டிருந்தன. இதைக் கண்டதும் எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அதை பறித்துச் சென்று சமைத்து உண்ண விரும்பினோம். ஏனெனில் நாம் இருவரும் பல வருடங்கள் தமிழ்நாட்டில் சிறையில் இருந்தவர்கள். சிறையில் முருங்கைக்காய் கறி சமைப்பதில்லை. அதனால் பல வருடங்கள் இதனை உண்ணும் வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் பல வருடம் கழித்து கம்போடியாவில் முருங்கை மரத்தைக் கண்டதும் அதில் காய்களைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் நாம் முருங்கைக்காயை பறிக்கும்போது பார்த்த கம்போடியர்களும் அதை கொண்டு வந்து சமைக்கும்போது வீட்டுக்கார கம்போடியரும் எங்களை ஆச்சரியமாக பார்த்தனர். அது ஏன் முதலில் எங்களுக்கு விளங்கவில்லை. அப்புறம் கேடட்போது “முருங்கை மரம் பேய் மரம் என்றும் அதனால் தாம் முருங்கைக்காய் சாப்பிடுவதில்லை” என்றும் அவர்கள் கூறினார்கள். கண்ட புழு பூச்சி எல்லாவற்றையும் வறுத்து சாப்பிடும் கம்போடியர்கள் முருங்கை மரத்தை ஏன் பேய் மரமாக நினைத்து சாப்பிடுவதில்லை என்பதற்கு இன்று வரை என்னால் விடை காண முடியவில்லை. குறிப்பு - இலங்கையில் இன்று முருங்கைக்காய் கிலோ 2000ரூபாய் என்றதும் இந்த கம்போடிய சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.

No comments:

Post a Comment