Thursday, February 15, 2024

கருத்துகளை புரிந்துகொள்வது எப்படி?

• கருத்துகளை புரிந்துகொள்வது எப்படி? பொருள் இருக்கிறது. அது இயங்கிக்கொண்டிருக்கிறது. அதில் இருந்து கருத்து பிறக்கின்றது. உதாரணமாக ஒருவர் ஒரு அடி முன்னோக்கி வைத்தால் உடனே ஒருவர் நல்லதொரு அசைவு என்று பாராட்டுவார் இன்னொருவர் இது உகந்த நேரம் இல்லை. எனவே அசையாமல் இருக்க வேண்டும் என்பார். வேறொருவர் இது ஆபத்து. பின்னோக்கி ஒரு அடி வைக்க வேண்டும் என்பார். ஒரு அடி அசைந்ததற்கே இப்படி பல கருத்துகள் இருக்கும்போது பாரிய சமூக அசைவில் எத்தனைவிதமான கருத்துகள் வந்து விழும்? சரி. இப்படி பல கருத்துகள் வருவது தவிர்க்க முடியாதவை என்பதை காண்கிறோம். அப்படியென்றால் இதில் எதனை எமக்கான கருத்தாக எடுத்துக்கொள்வது? உச்சரிக்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னரும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது என்று லெனின் கூறுகின்றார். எனவே ஒருவர் கூறும் கருத்து யாரின் நலனுக்கானது என்பதை பார்க்கும் அறிவு எமக்கு இருக்க வேண்டும். இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகள் ஒன்றில் ஆளும் அரசுகளின் நலனை பாதுகாப்பதாக இருக்கின்றது. அல்லது ஆளப்படும் மக்களின் நலனுக்கானவையாக இருக்கின்றன. உழைத்து உழைத்து உருக்குலைந்த மக்களை மேலே எழும்பவிடாதவாறு அழுத்திப் பிடிக்கும் கருவிகளாக மதமும் கடவுளும் இருக்கின்றன. அதாவது மதமும் கடவுளும் ஆளும் அரசுகளின் நலனை பாதுகாப்பதாக இருக்கின்றன. ஆனால் அது புரியாமல் மக்கள் அதனை பின்பற்றுகின்றன. சரி இப்போது கோழிக்கு இரண்டு கால் என்று சுமந்திரன் கூறினால் அதனை எப்படி பார்ப்பது? உடனே நாம் கோழியின் மூன்றாவது காலை தேட வேண்டும். ஏனெனில் சுமந்திரன் ஒருபோதும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து கூறமாட்டார்.

No comments:

Post a Comment