Thursday, December 27, 2018

ஆழமாக புதைக்கப்பட்ட “ஈரோஸ்” இயக்கத்தை தோண்டி எடுக்க இந்திய உளவுப்படை முயலுகிறதா?

ஆழமாக புதைக்கப்பட்ட “ஈரோஸ்” இயக்கத்தை
தோண்டி எடுக்க இந்திய உளவுப்படை முயலுகிறதா?
தோழர் ரத்ணா ஆரம்பித்த ஈரோஸ் இயக்கம் அவரின் காலத்திலேயே தலைவர் பாலகுமாரினால் கலைக்கப்பட்டுவிட்டது.
தோழர் ரத்ணாவே தான் முன்வைத்த ஈழம், புரட்சி எல்லாவற்றையும் தன் இறுதிக் காலத்தில் கைவிட்டுவிட்டார்.
தோழர் ரத்ணாவுடன் சேர்த்து அவர் முன்வைத்த ஈழம், ஈழவர், புரட்சி எல்லாம் புதைக்கப்பட்டுவிட்டது.
இப்போது சிலர் ரத்ணாவையும் அவரது ஈழம், ஈழவர் கொள்கையையும் மீண்டும் தோண்டி எடுத்து உயிர் கொடுக்க முனைகின்றனர்.
தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படப் போகும் ஒற்றுமையைக் குழப்புவதற்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்குவதில் இந்திய உளவு அமைப்பு முனைப்பாக இருக்கிறது.
அதன் ஒரு அங்கமாக மலையகத்தில் இவ்வாறான ஒரு முயற்சியை இந்திய உளவு அமைப்பு தோழர் ரத்ணாவை தோண்டி எடுத்து முயற்சி செய்கிறது.
இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக போராடிய தோழர் நெப்போலியனை இவ் ஈரோஸ் இயக்கத்தின் மூலமே மலையகத்தில் இந்திய உளவுப்படை கொலை செய்தது.
மீண்டும் அதே மலையகத்தில் தன் கைக்கூலி இயக்கத்தை உயிப்பிக்க இந்திய உளவுப்படை முயற்சி செய்கிறது.

No comments:

Post a Comment