Thursday, December 27, 2018

சம்பந்தர் அய்யா! வடை போச்சே அய்யா!!

சம்பந்தர் அய்யா!
வடை போச்சே அய்யா!!
எது நடக்கும் என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது
எது நடக்காது என்று சம்பந்தர் அய்யா நினைத்தாரோ அது நடந்து விட்டது.
யாரை “தேசிய தலைவர்” என்று புகழ்ந்தாரோ அதே மகிந்த ராஜபக்ச இன்று அவர் பதவியை பறித்து விட்டார்.
இப்பொது ரணிலுக்கும் பதவி கிடைத்துவிட்டது. மகிந்தவுக்கும் பதவி கிடைத்து விட்டது. ஆனால் இவர்களது ஜனநாயகத்திற்காக போராடிய சம்பந்தர் அய்யாவின் பதவி பறி போய்விட்டது.
அவர்கள் தங்களுக்குள் என்னதான் அடிபட்டாலும் தமிழருக்கு எந்தப் பதவியும் கிடைக்கக்கூடாது என்பதில் ஒற்றுமையாக செயற்படுவார்கள்.
எப்பவாவது எதிர்பாராதவிதமாக எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழருக்கு கிடைத்தாலும் அதையும்கூட ஏதாவது சூழ்ச்சி செய்து பறித்து விடுவார்கள்.
முன்னர் அமிர்தலிங்கத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தபோது அப்போதைய ஜே.ஆர். ஜெயவர்த்தனா தன் கட்சியில் இருந்து சிலரை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்து அமிர்தலிங்கத்தின் பதவியை பறிக்க நினைத்தாக கூறுவார்கள்.
பின்பு 1983 கலவரத்தை அடுத்து அமிர்தலிங்கத்தை பதவியை விட்டு ஓட வைத்தார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா.
இவை யாவும் நன்கு தெரிந்த சம்பந்தர் அய்யா உண்மையில் இந்த பதவியை ஏற்றிருக்கக் கூடாது.
அதுமட்டுமல்ல ஒருபுறம் ஆதரவு தெரிவித்து ரணிலை பிரதமராக அமர்த்திவிட்டு மறுபறத்தில் எதிர்க்கட்சி தலைவராக தொடர்வது தார்மீகம் இல்லை.
சம்பந்தர் அய்யா தானாகவே ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருக்கும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சம்பந்தர் அய்யாவின் பதவி பறிபோனதில் வருத்தப்பட எதுவும் இல்லை. ஏனெனில் இந்த பதவியை வைத்துக்கொண்டு அய்யா எதையும் சாதிக்கவில்லை.
தனக்கு இரு சொகுசு பங்களா, 32 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு 6 சொகுசு வாகனங்கள், 40 ஊழியர்கள் என கேட்டு வாங்கிய சம்பந்தர் அய்யா தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை.
இனியாவது பதவிக்காக அலையாமல் தன் இறுதிக் காலத்தில் கொஞ்சமாவது தமிழ் மக்கள் நலனுக்கு உழைக்க அய்யா முன்வர வேண்டும்.
அதைவிடுத்து சுமந்திரன் பேச்சைக் கேட்டுக்கொண்டு ரணில் அமைச்சரவையில் ஏதும் அமைச்சு பதவி பெற முனைந்தால் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

No comments:

Post a Comment