Thursday, December 27, 2018

•கரவெட்டி விடைதேடும் இரு வினாக்கள்!

•கரவெட்டி
விடைதேடும் இரு வினாக்கள்!
பயப்படாதீர்கள். மீண்டும் ஏதோ கரவெட்டி போராட்ட கதை எழுதப் போகிறேனோ என்று.
நீண்ட நாளாக என் ஊரைப் பற்றி என்னுள் இருந்த வினா. யாராவது பதில் அளிப்பார்களா என்ற ஏக்கத்துடன் எழுதுகிறேன்.
முதலாவது, அத்துளு அம்மன் கோவில்
கரவெட்டியில் அத்துளு வயல்களுக்கு அருகில் இந்த அம்மன் ஆலையம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இது கண்ணகி அம்மன் என்றும் மதுரையை எரித்த கண்ணகி இறுதியாக கரவெட்டி வந்து இந்த இடத்தில் அமர்ந்ததாக கூறுகிறார்கள்.
நான் அறிந்தவரையில் மதுரையை எரித்த கண்ணகி அதன் பின் கேரள எல்லையில் உள்ள ஒரு மலையில் போய் அமர்ந்ததாக இந்தியாவில் கூறுகிறார்கள்.
அப்படியாயின் கரவெட்டியில் எப்படி இந்த அம்மன் ஆலையம் வந்திருக்க முடியும்?
இரண்டாவது மாணிக்கவாசகர் பாடசாலை.
இது கரவெட்டி தச்சன்தோப்பு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு ஆரம்ப பாடசாலை. இங்குதான் நான் 5ம் வகுப்புவரை படித்தேன்.
கரவெட்டியில் எதற்காக மாணிக்கவாசக நாயனாருக்கு பாடசாலை நிறுவினார்கள்?
எனது நண்பர் ஒருவர் கூறுகிறார், மாணிக்கவாசக நாயனார் தமிழகத்தில் பிறந்தார் என்பது தவறு. அவர் கரவெட்டியில்தான் பிறந்தார் என்று.
என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் நண்பர் அதற்கு ஆதாரமாக பல விடயங்கள் கூறுகிறார்.
யாராவது முடிந்தால் எனது இரு வினாக்களுக்கும் விடை தாருங்களேன் பிளீஸ்!
குறிப்பு- ஒருமுறை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கரவெட்டி என்ற பெயர் வரக் காரணம் என்னவென்று கேட்டேன்.
அதற்கு அவர் “கரவெட்டி மக்கள் மனதில் எந்த கரவும் இல்லாதவர்கள்” என்று பதில் அளித்தார்.
இதைக் கேட்டதும் நான் உடனே சிரித்துவிட்டேன். அவரும் சிரித்துக்கொண்டே நீ சரியான குறும்பன்டா என்றார்.
அதுசரி கரவெட்டி என்ற பெயருக்கு என்ன காரணம் இருக்கும்?

No comments:

Post a Comment