Thursday, December 27, 2018

•“பன்னி” வடிவேல் சுரேஸ் எங்கே?

•“பன்னி” வடிவேல் சுரேஸ் எங்கே?
மலையக தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு கேட்டு 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
மகிந்தவோ அல்லது ரணிலோ எந்த அரசானாலும் இவர்களின் கோரிக்கை குறித்து சிறிதும் அக்கறை கொள்ளவில்லை.
கண்டியில் இருக்கும் இந்திய தூதுவரோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதுவரோ அல்லது அம்பாந்தோட்டையில் இருக்கும் இந்திய தூதுவரோ அல்லது கொழும்பில் இருக்கும் இந்திய தூதுவரோ இவர்களின் அகிம்சைப் போராட்டத்தில் அக்கறை கொள்ளவில்லை.
மாறாக வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவதிலேயே அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.
இடைக்கால பட்ஜட்டிற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பும்கூட இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
கேவலம் என்னவென்றால் மலையக தலைவர்களில் ஒருவர்கூட இந்த உண்ணாவிரத மேடைக்கு வரவில்லை.
முக்கியமாக மலையக மக்களுக்காக கட்சி மாறி மந்திரி பதவி பெற்றதாக கூறிய பன்னி வடிவேல் சுரேஸ் இப்ப எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.

No comments:

Post a Comment