Thursday, November 29, 2018

போர் இன்னும் ஓயவில்லை!

•போர் இன்னும் ஓயவில்லை!
ஒருவர் படம் சரியில்லை என்றால் எமது முதல் கேள்வி அந்த படத்தை பார்த்தாயா என்பதே.
அதேபோல் ஒருவர் தோசை ருசியில்லை என்றால் எமது முதல் கேள்வி நீ தோசை சாப்பிட்டாயா? என்பதே.
ஆனால் ஒருவர் மார்க்சியம் சரியில்லை என்றால் யாருமே அவரிடம் “நீ மார்க்சியத்தை படித்திருக்கிறாயா?” என்று கேட்பதில்லை.
ஒரு விடயத்தை பற்றி எதுவுமே தெரியாமல் அந்த விடயம் பற்றி யாரும் எதுவும் கூற முடியுமென்றால் அது இன்று மார்க்கியம் மட்டுமே.
பொதுவாக, ஒரு விபத்து நடந்தால் யாரும் வாகனம் மீது குற்றம் கூறுவதில்லை. மாறாக அதை ஓட்டிய டிறைவர் மீதே குறை கூறுவார்கள்.
ஆனால் மார்க்சியவாதிகள் தவறு செய்தால் மட்டும் மார்சியவாதிகள் மீது கூறாமல் மார்க்சிசயத்தின் மீது குறை கூறுகிறார்கள்.
மார்க்ஸ் உட்பட அனைவரும் மேற்கு ஜரோப்பாவிலேதான் புரட்சியை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக முதல் புரட்சி ரஸ்சியாவிலே வெடித்தது.
அடுத்து சீனாவிலே அது தேசிய முதலாளிகளை உள்ளடக்கி புதிய ஜனநாக புரட்சியாக தொடர்ந்தது.
ரஸ்சியாவிலே தோழர் லெனின் ஆரம்பித்து வைத்த போர் இன்னும் ஓயவில்லை. அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. எனவே அடுத்த புரட்சி எங்கே வெடிக்கும் என சர்வதேசம் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறது.
யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அது ஈழத்தில்தான் நிகழப் போகிறது. ஈழத் தமிழர்களின் போராட்டம் இந்தியாவை சுக்கு நூறாக உடைத்து தேசிய இனங்களின் விடுதலையை அது நிகழ்த்தப் போகிறது.
தமிழ் தேசியத்தை மறுப்பவர்கள் உண்மையான மார்க்சியவாதிகளாக இருக்க முடியாது என்ற உண்மையை காலம் காட்டி நிற்கிறது.
ரஸ்சிய புரட்சியை நினைவு கூர்வோம்.
போரை தொடர்ந்து முன்னெடுத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்போம்!

No comments:

Post a Comment