Thursday, November 29, 2018

இந்திராகாந்தியும் பத்மநாபாவும் மகத்தான மாமனிதர்களா?

•இந்திராகாந்தியும் பத்மநாபாவும்
மகத்தான மாமனிதர்களா?
இன்று இந்திராகாந்தி மற்றும் பத்மநாபா ஆகியோரின் பிறந்தநாள் ஆகும்.
இதனையொட்டி இந்திராகாந்தியும் பத்மநாபாவும் மகத்தான மாமனிதர்கள் என்று சிலர் முகநூலில் எழுதுகின்றனர்
இந்திராகாந்தியையும் பத்மநாபாவையும் ஒன்றாக ஒப்பிட்டு எழுதியிருப்பது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் இவ்வாறு எழுதியிருப்பது நாபாவின் ஈபிஆர்எல்எவ்யைச் சேர்ந்தவர்களே.
அவர்களுக்கு முதலில் ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,
1983ம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் இருந்த அலன் தம்பதிகள் என்னும் வெள்ளைக்கார தம்பதிகளை ஈபிஆர்எல்எவ் இயக்கம் கடத்தியது.
இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றால் சிறையில் அடைத்து வைத்திருக்கும் தமிழ் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை போட்டார்கள்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.அர் ஜெயவர்த்தனா உடனே நிபந்தனையை ஏற்றுக்கொண்டார். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் போராளிகளை விடுதலை செய்ய சம்மதித்தார்.
ஆனால் இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி சென்னையில் இருந்த பத்மநாபா உட்பட முக்கிய ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களை பிடித்து சென்று ஒரு ஹோட்டலில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுவித்தார்.
இப்போது எனது கேள்வி என்னவென்றால் நாபாவையும் நாபாவை உதைத்த இந்திராகாந்தியையும் எப்படியடா உங்களால் மாமனிதர்கள் என ஒன்றாக ஒப்பிட முடிகிறது?
இந்திராகாந்தி இந்தியாவில் பல சிறுபான்மை இனங்களை சுட்டுக் கொன்று அடக்கி ஆண்டவர். அதுமட்டுமல்ல அவர் தமிழீழத்தையும் ஒருபோதும் ஆதரிக்கவுமில்லை. அங்கீகரிக்கவுமில்லை.
அப்படியிருக்க ஈழத்தை புரட்சிகர முறையில் விடுதலை செய்ய முனைந்த நாபாவை எப்படி இந்திராகாந்தியுடன் ஒப்பிட முடிகிறது.?
சரி. பரவாயில்லை. மகத்தான மாமனிதர்கள் என்பதற்கு காரல்மாக்ஸ் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்பதையாவது கொஞ்சம் படித்து பாருங்கள்
“மனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தியுள்ள ஒரு கல்விமானாகவும், மாபெரும் ஞானியாகவும், சிறந்த கவிஞனாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான, உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத் தான் வரலாறு மாமனிதர்களென ஏற்றுக் கொள்கிறது” காரல் மாக்ஸ்
தயவு செய்து இனியாவது எழுத முன்னர் கொஞ்சம் யோசித்து எழுதுங்கடா.

No comments:

Post a Comment