Wednesday, January 31, 2024

1996ல் கலைஞர் மீண்டும் முதல்வரானதும்

1996ல் கலைஞர் மீண்டும் முதல்வரானதும் அவரைச் சந்திப்பதற்கு சில ஈழத் தமிழ் அகதிகள் சென்னை சென்றனர். கலைஞர் வீட்டு வாசலில் அவ் அகதிகள் நிற்பதைக் கண்ட ஸ்டாலின் “ உங்களால்தானே ஆட்சியை இழந்தோம். மீண்டும் வந்துவிட்டீர்களா?” என திட்டி அனுப்பிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட கலைஞர் பின்னர் அந்த அகதிகளை அழைத்து ஸ்டாலின் பேச்சுக்காக வருத்தம் தெரிவித்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கலைஞார் தன் உறவு வட்டத்தில் எப்போதும் சில ஈழத் தமிழர்களை வைத்திருப்பார். தன்னை ஈழத் தமிழ் ஆதரவாளராக காட்டிக் கொள்வார். அதனால்தான் அவர் ஊழல் வழக்கில் மாட்டியபோது அவருக்காக ஈழத் தமிழர் ஜி.ஜி.பொன்னம்பலம் பணம் எதுவும் வாங்காமல் இலவசமாக வாதாடினார். கலைஞர் சென்னைக்கு வந்தபோது யாரும் வீடு கொடுக்காத நிலையில் ஒரு ஈழத் தமிழரே வீடு கொடுத்தார் என கூறுகின்றனர். அது எந்தளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் பின்னர் தன் மகள் கனிமொழி தனக்கு ஒரு தம்பி வேண்டும் என்று கேட்டபோது அவர் ஒரு ஈழ அகதிச் சிறுவனையே தத்தெடுத்தார். ஸ்டாலின் அப்பவும் சரி, இப்பவும் சரி ஈழத் தமிழர்களுடன் முகம் கொடுத்தே பேச மாட்டார். அவருடைய உறவு வட்டத்தில் ஒரு ஈழத் தமிழர்கூட இல்லை. அவருக்கு ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி எதுவுமே தெரியாது. எனவே ஸ்டாலினுடன் நெருங்கி ஈழத் தமிழர்கள் பேச முடியாத நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி மகன் உதயநிதியுடன் பேசுவது மட்டுமே. உதயநிதி நடிகை நயன்தாராவுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடிப்போய் உதவுகிறார். நடிகை நயன்தாரா கேட்டுக்கொண்டால் உதயநிதி நிச்யம் ஈழத் தமிழர் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க முயல்வார். எனவே அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டியவர்கள் நயன்தாராவை அழைத்து ஏன் ஒரு பாலம் கட்டக்கூடாது? 😂

No comments:

Post a Comment