Tuesday, January 30, 2024

மனைவி துணைவி இருவரையும் பக்கத்தில்

மனைவி துணைவி இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு “ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு” என்று பேசும் “தில்” கலைஞருக்கு மட்டுமே உண்டு. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். அதை பற்றிக் பேசக்கூடாது என்று உடன்பிறப்புகள் கூறுகின்றனர். உண்மைதான். ஆனால் ஒரு தலைவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சட்டவிரோதமாக இருந்தால் அது பொதுவெளியில் பேசப்படும்தானே? இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அதனால்தான் ராசாத்தி அம்மாள் யார் என்று கேட்கப்பட்டபோது தன் மகள் கனிமொழியின் தாயார் என்று தந்திரமாக கலைஞர் பதில் அளித்தார். இதில் வேதனை என்னவென்றால் கனிமொழி பிறந்தபோது அது கலைஞர் மகள் என எழுதியதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதே கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது தன் மகளை விடுதலை செய்யுமாறு சோனியாவிடம் சென்று கெஞ்சினார் கலைஞர். ஒருமுறை எம்.ஜி.ஆர் ஆட்சியில் தன்மீது உளி வீசப்பட்டது என்றும் தன் உயிருக்கு ஆபத்து என்றும் கலைஞர் பேசினார். எங்கே எப்போது உளி வீசப்பட்டது என்று கேட்டபோது கலைஞர் அதற்கு பதில் அளிக்கவில்லை. நடிகை சிறீதேவி வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்போதே இந்த உளி வீச்சு நடைபெற்றது என அப்போது பரவலாக பேசப்பட்டது. கவிஞர் கண்ணதாசனும் தன் வனவாசம் நூலில் விபச்சாரியுடன் உறவு கொண்டுவிட்டு நன்றாக திருப்திபடுத்தவில்லை என்றுகூறி கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிவிட்டார் கலைஞர் என்று எழுதியுள்ளார். கண்ணதாசன் எழுதியது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் கண்ணதாசன் மீது இதுகுறித்து வழக்கு எதுவும் கலைஞர் போடவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அவருக்காக மதுரை போஸ்ட் ஆபீசில் ஒரு குண்டு வெடித்தது. அக் குண்டை வைத்தவர்களில் ஒருவர் மதுரை திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ஜெயப்பெருமாள். அந்த ஜெயப்பெருமாள் தண்டனை பெற்று மதுரை சிறையில் இருந்தவேளை அவருடன் நான் பேசியபோது “ உங்கள் தலைவர் கலைஞர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது சரியா?” எனக் கேட்டேன். அதற்கு அவர் “பல் இருக்கிறவன் பக்கோடா தின்கிறான். அவருக்கு கெத்து இருக்கிறது. அவர் அனுபவிக்கிறார். உங்களுக்கு ஏன் எரிகிறது” எனக் கூறினார். அதற்கு நான் “ உங்களைப் போன்ற தொண்டர்கள் இருக்கும்வரை கலைஞர் போன்ற தலைவர்கள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை” என்றேன். குறிப்பு - இந்த பதிவை படித்துவிட்டு உடன்பிறப்புகள் திராவிட மொழியில் என்னை திட்ட வேண்டாம். ஏனெனில் நான் தமிழன். எனக்கு திராவிடமொழி புரியாது.😂

No comments:

Post a Comment