Wednesday, January 31, 2024

நான் வேலூர் சிறப்புமுகாமில்

நான் வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை அங்கு வவுனியாவை சேர்ந்த கந்தையா என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு புலவர். அவரை ஈழத்து பாரதி என்று அழைப்பார்கள். அவர் கரூர் சாதாரண அகதி முகாமில் தங்கியிருந்திருந்தார். அவரை புலி என்றும் அவரால் தமிழ்நாட்டின் அமைதிக்கு ஆபத்து என்றும்கூறி கியூ பிராஞ் பொலிஸ் அவரை சிறப்புமுகாமில் அடைத்துள்ளனர். சரி அவர் செய்த பயங்கரவாதம் என்ன? கரூர் தாசில்தார் அகதிமுகாமில் உள்ள பெண் ஒருவரை அழைத்துக்கொண்டு லாட்ஜ் க்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த இந்த கந்தையா தாசில்தாரிடம் “ஹனி மூன் (தேனிலவு) எப்படி இருந்தது?” என்று கிண்டலாக கேட்டிருக்கிறார். உடனே கோபம் அடைந்த தாசில்தார் கியூ பிராஞ்சிடம் கூறியுள்ளார். கியூ பிராஞ் பொலிஸ் இவரை புலி என்றுகூறி சிறப்புமுகாமில் கொண்டு வந்து அடைத்து விட்டனர். சரி , இந்த பயங்கரவாதி கந்தையாவுக்கு எத்தனை வயது? சொன்னால் நம்பமாட்டீர்கள் அவருக்கு 80 வயது. ஒரு என்பது வயது கிழவரை கொடிய பயங்கரவாதி என்று சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். குறிப்பு – கீழே உள்ள படத்தில் உள்ளவர் கியூ பிராஞ் பொலிசாரால் கொடிய பயங்கரவாதி என்று சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ஒரு அப்பாவி அகதி. மற்றவர் துணையின்றி எழுந்த நடமாட முடியாத இவரை வெளியே விட்டால் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பார் என கியூ பிராஞ் பொலிசார் கூறினார்கள்.

No comments:

Post a Comment