Tuesday, July 30, 2019

•ஆறாவது நாளாக உண்ணாவிரதம் தொடரும் தமிழ் அரசியல் கைதி தோழர் தேவதாசன்.

•ஆறாவது நாளாக உண்ணாவிரதம் தொடரும்
தமிழ் அரசியல் கைதி தோழர் தேவதாசன்.
தேவதாசன் ஒரு புத்த பிக்;குவாக இருந்திருந்தால்
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருப்பார்.
தேவதாசன் ஒரு சிங்களவராக இருந்திருந்தால்
அவருக்காக மகிந்த ராஜபக்சா குரல் கொடுத்திருப்பார்.
தேவதாசனிடம் 5 லட்சம் ரூபா பணம் இருந்திருந்தால்
கஞ்சா வழக்கில் ஆஜரான சயந்தன் வழக்காடியிருப்பார்.
தேவதாசன் தமிழரசுக்கட்சியாக இருந்து கஞ்சா கடத்தியிருந்தால்
சுமந்திரன் ஒரு தொலைபேசி அழைப்பில் விடுதலை கிடைக்க வழி செய்திருப்பார்.
நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் ஆறாவது நாளாக தொடர்கிறது
அவர் உடல் நிலை மோசாகியுள்ளது என செய்திகள் வருகின்றன.
ஆனால் அரசு இதுவரை எந்த பதிலும் அவருக்கு வழங்கவில்லை.
அரசு மட்டுமல்ல தமிழ் தலைமைகளும் யாரும் அக்கறை காட்டவில்லை.
பொதுவாக அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கும்போது சிறை சென்று பார்வையிடும் தலைவர்களும் இதுவரை செல்லவில்லை.
குறைந்த பட்சம் ஒரு அறிக்கைகூட விடவேண்டும் என்று தமிழ் தலைமைகளுக்கு தோன்றவில்லை.
தேவதாசன் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. அகிம்சை வழியில்தானே போராடுகிறார்.
வடக்கு கிழக்கில் காந்தி சிலைகளை நிறுவும் இந்திய தூதுவரும் இந்த அகிம்சை போராட்டம் குறித்து வாய் திறக்கவில்லையே?
“ஆயுதம் ஏந்திப் போராடுவது தவறு. அகிம்சை வழியில் போராட வேண்டும்” என்று கூறும் ஒருவன்கூட ஆறாவது நாளாக அகிம்சை வழியில் போராடும் தேவதாசனுக்கு பதில் அளிக்கவில்லை.
தேவதாசன் உண்ணாவிரதம் அவருக்கு பயன் பெற்று தருகிறதோ இல்லையோ ஆனால் தமிழ் மக்கள் அகிம்சை வழியில் போராடி எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையை புரிய வைக்கிறது.
வாழ்த்துக்கள் தேவதாசனுக்கு.
குறிப்பு - இன்னும் இரண்டு நாளில் சிறை சென்று தேவதாசனை நேரில் பார்ப்பதாக அமைச்சர் மனோகணேசன் அறிவித்திருப்பதாக தெரிய வருகிறது. இது உண்மையாயின் அவரின் உணர்வுகளுக்கு பாராட்டுகள்.

No comments:

Post a Comment