Tuesday, July 30, 2019

•ஈழத் தமிழ் அகதிகள் குறித்து

•ஈழத் தமிழ் அகதிகள் குறித்து
ஒரு மேற்கு வங்க எம்.பி க்கு இருக்கும் அக்கறை
தமிழக எம்.பிக்கள் எவருக்குமே இல்லையே. அது ஏன்?
ஒருவர் மேற்கு வங்க மாநில எம்பி
இன்னொருவர் தமிழக எம்பி. அதுவும் இலக்கியவாதி எம்பி யாம்.
ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து அந்த மேற்கு வங்க எம்.பிக்கு இருக்கும் அக்கறை இந்த தமிழகத்து எம்.பிக்கு இல்லையே.
இவர் பாராளுமன்றத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அக்கறையை ஈழ அகதிகள் மீது காட்டவில்லையே.
இந்த எம்.பிக்கு மட்டுமல்ல தமிழகத்து எந்தவொரு எம்.பிக்கும் இல்லையே? அது ஏன்?
கடந்த 36 வருடங்களாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில எம்பி அகமத் உசேன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.
அகமத் உசேன் தமிழர் இல்லை. அவர் தமிழ்நாட்டில் இருந்து தெரிவு செய்யப்படவில்லை. அவரை எந்த ஈழத் தமிழ் தலைவரும் சந்தித்து ஆதரவு கேட்கவும் இல்லை.
ஆனாலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதுபோல் ஈழத் தமிழ் அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தமிழக எம்.பிக்கள் ஈழ அகதிகள் குறித்து அக்கறை கொள்ளாதது ஆச்சரியம் இல்லை. ஏனெனில் ஈழத் தமிழ் தலைவர்களே தமது அகதிகள் குறித்து அக்கறை கொள்ளவில்லையே.
குறிப்பு - ஈழத் தமிழர்கள் கிரிக்கட்டில் இந்தியாவை ஆதரிக்கவில்லை என சில சங்கிகள் கோவிக்கின்றனர். 36 வருடமாக இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. ஆனால் கிருத்தவ நாடான நியூசிலாந்து ஈழ அகதிகளுக்கு 5 வருடத்தில் குடியுரிமை வழங்குவதோடு படிப்பு வேலை வீடு எல்லாம் வழங்குகிறது. இப்போது கூறுங்கள்.ஈழத் தமிழர் எப்படி இந்தியாவை ஆதரிக்க முடியும்?

No comments:

Post a Comment