Tuesday, July 30, 2019

“உன் கோவணம் உரியப்பட்டதா? உரிந்தவன் கைகளை வெட்டு.

“உன் கோவணம் உரியப்பட்டதா?
உரிந்தவன் கைகளை வெட்டு.
ஆனால் ஒருபோதும் கெஞ்சிக் கோவணம் கட்டாதே.
அதைவிட அம்மணமாகவே போராடு”
– கவிஞர் காசி ஆனந்தன்.
2009ல் லண்டனில் சில தமிழ் பிரமுகர்கள் எப்போதும் பைல் கட்டுடன் திரிவார்கள். ஏன் என்று கேட்டால் “மகிந்தா தீர்வு எழுதி தரச் சொல்லிக் கேட்டவர். அதுதான்” என்பார்கள்.
இப்போது அந்த பிரமுகர்களையும் காணவில்லை. அவர்கள் காவித்திரிந்த பைல் கட்டுகளையும் காணவில்லை.
அதுபோல இப்போது தீர்வுக்காக இந்தியா செல்வது பாஷனாக உள்ளது. மோடி பதவிக்கு வந்த பின்பு இது அதிகரித்துள்ளது.
மோடி பிளைட் டிக்கட் அனுப்புவார் என்று சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் கொழும்பில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கிடையில் சத்யலிங்கம், குகதாசன் கோஷ்டியினர் தமிழகம் சென்று தமிழக பாஜக தலைவர்களை சந்தித்துள்ளனர்.
இன்னொரு பக்கத்தில் ஈழத்து சிவசேனை தலைவர் சச்சிதானந்தம் அவர்கள் இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஐPன் சம்பத்துடன் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறாராம்.
போகிற போக்கைப் பார்த்தால் “பிக்பாஸ்” சென்றுள்ள லாஸ்லியாவும் தான் “மையம்” தலைவர் கமலகாஸனுடன் இனப் பிரச்சனை தீர்வு பற்றி பேச சென்றதாக கூறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
தமிழகத்தில் பாஜக தலைவர்களை யாருமே சட்டை செய்வதில்லை. தமிழக பாஐக தலைவர்களால் தமிழக பிரச்சனைகளுக்கே குரல் கொடுக்க முடியவில்லை. அப்படியிருக்க ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அவர்களால் எப்படி குரல் கொடுக்க முடியும்?
அதுமட்டுமல்ல ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணத்தானே மோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சம்பந்தர் , சுமந்திரன் ஆகியோர் பேசுகின்றனர்.
அப்படியிருக்க எதற்காக தமிழக பாஐக தலைமை சத்யலிங்கம் கோஷ்டியுடன் பேச வேண்டும்? விரும்பினால் சம்பந்தர் , சுமந்திரனையே அழைத்து பேசியிருக்கலாமே.
கடந்த வருடம்தானே தமிழக பாஐக தலைவர் தமிழிசை அவர்கள் யாழ்ப்பாணம் வந்து அனைவரையும் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு யாரும் இனப்பிரச்சனை தீர்வு பற்றி கூறவில்லையா?
அல்லது, யாழ்ப்பாணம் வந்தபோது காணமல்போனவர்களின் உறுவுகளை சந்திக்க மறுத்த இந்த தமிழிசைக்கு இப்போது எப்படி ஈழப் பிரச்சனையில் அக்கறை வந்தது?
மொத்தத்தில் மோடியின் பாஐக அரசு ஈழத் தமிழர்களை ஏமாற்றுகிறது. அதற்கு எமது ஈழத் தலைவர்களும் துணை போகின்றனர்.
இத்தனை அழிவிற்கு பின்பும் இத்தனை அழிவிற்கு காரணமான இந்தியஅரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று நம்பும் எம் தலைவர்களை என்னவென்று அழைப்பது?
எமது கோவணத்தை உருவிய இந்திய அரசிடம் கெஞ்சிக் கோவணம் கட்டுவதைவிட அம்மணவாகவே நின்று போராடலாம்.
குறிப்பு - இந்த கருத்தை சொன்ன கவிஞர் காசி அனந்தனனே தன் கோவணத்தை உருவிய இந்திய அரசிடமே கெஞ்சிக் கொண்டிருக்கிறார். என்ன செய்வது?

No comments:

Post a Comment