Tuesday, July 30, 2019

•1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள் காரணமா?

•1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள் காரணமா?
முதலாவது,
1983ல் நடந்தது இனக் கலவரம் என்கிறார்கள். அது தவறு. அது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை
இரண்டாவது,
1983ல் நடந்த கொலைகளுக்கு புலிகளே காரணம் என்கிறார்கள். புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 13 ராணுவத்தினர் இறந்தமையினால் இது நிகழ்ந்தது என்கிறார்கள்.
இதுவும் தவறு. ஏனெனில்,
(அ)1956, 1966, 1977 ம் ஆண்களில்கூட கலவரம் என்னும் பெயரில் தமிழ் இனப்படுகொலைகள் நடந்தன. அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லை. எந்த ராணுவத்தினரும் கொல்லப்படவில்லை.
(ஆ)1983 யூலைக்கு முன்னரும் பல பொலிசார் மற்றும் ராணுவத்தினர் புலிகள் இயக்கத்தாலும் வேறு இயக்கங்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
(இ)அதற்கு முன்னர் 13 ராணுவத்தினர் ஒரேயடியாக கொல்லப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியென்றால் பின்னர் ஆயிரக் கணக்கில் ராணுவத்தினர் கொல்லப்ட்டார்களே. அப்போது ஏன் கலவரம் வெடிக்கவில்லை?
சரி. ஆனால் 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டதால்தான் கலவரம் வெடித்ததாக நம்மவர்கள் சிலர் இப்பவும் கூறுகிறார்களே? அதற்கு என்ன பதில் கூறுவது?
அவர்களுக்கு எந்த பதிலும் கூறத் தேவையில்லை. அவர்கள் முகத்தில் சுடுதண்ணியை ஊற்றுங்கள். புரிந்து கொள்வார்கள்.
குறிப்பு- கண்ணியாவில் பிள்ளையார் கோவிலை காக்க சென்ற இந்துமத பெரியர் ஒருவரின் முகத்தில் சுடுதண்ணியை ஊற்றியிருக்கிறார்கள். அது குறித்து இதுவரை பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
•1983 யூலை இனக் கலவரம் எமக்கு கற்று தரும் பாடம் என்ன?
எமக்கு பல பாடங்களை அது கற்று தந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது 1983ற்கு பின்னர் இனக் கலவரம் நடக்கவில்லை. ஏனெனில் தமிழ் போராளிகள் கையில் ஆயுதம் இருந்ததே.
இனியும் கலவரம் வந்தால் மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏந்தினால் அது முன்பைவிட பயங்கரமாக இருக்கும் என்பதையும் அது புரிந்துள்ளது.

No comments:

Post a Comment