Tuesday, July 30, 2019

கிரிக்கட்டில் இருக்கும் அரசியல் என்ன?

கிரிக்கட்டில் இருக்கும் அரசியல் என்ன?
கிரிக்கட்டில் இங்கிலாந்து கப் வென்றதற்கு எம்மவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
முகநூல் எங்கும் ஒரே கிரிக்கட் சமாச்சாரமாக நிரம்பி வழிகிறது.
இலங்கையில் முஸ்லிம் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று லண்டனில் நடைபெற இருந்தது.
அப்புறம் இன்று கிரிக்கட் பைனல் போட்டி நடப்பதால் யாரும் வரமாட்டகள் என்று நிகழ்வு நேற்று நடைபெற்றது.
அதாவது முஸ்லிம் பிரச்சனையைவிட கிரிக்கட்டே நம்மவர்களுக்கு முக்கியமாகிவிட்டது என்று இது காட்டுகிறது.
கிரிக்கட் ஒரு விளையாட்டு. அதில் எந்த அரசியலும் இல்லை என்று கூறுபவர்களே அதிகமாக இருக்கின்றனர்.
கிரிக்கட் விளையாட்டை கண்டு பிடித்த இங்கிலாந்தில் கிரிக்கட்டைவிட காற்பந்து விளையாட்டிற்கே மவுசு அதிகம்.
ஆனால் இன்று இங்கிலாந்தைவிட இந்தியா இலங்கை போன்ற ஆங்கிலேயர் ஆண்ட நாடுகளிலேயே கிரிக்கட் விளையாட்டிற்கு மவுசு அதிகமாக இருக்கிறது.
மக்களை போராட்ட எண்ணங்களில் இருந்து மடை மாற்ற இந்த விளையாட்டுகள் அரசுகளுக்கு பெரிதும் உதவுகின்றன.
அதனாலேயே அரசுகள் பல கோடி ரூபாக்களை செலவு செய்து இந்த விளையாட்டுகளை ஊக்குவித்து வருகின்றன.
இன்று வேலுப்பிள்ளை வியாழம்மா என்ற தாயார் காலமாகியுள்ளார். 1989ல் காணாமல் போன தனது மகனை தேடி வந்தவர்.
கடந்த 30 வருடமாக ஓயாது தேடி வந்த இத் தாயார் இறுதிவரை மகன் குறித்து எந்த தகவலும் அறியாமல் காலமாகிவிட்டார்.
இன்றுவரை இவர்களது பிள்ளைகள் இருக்கின்றனரா அல்லது இல்லையா என்ற ஒரு முடிவைக்கூட தெரிவிக்க அக்கறையற்று அரசு இருக்கிறது.
காணாமல் போனவர்களின் உறவுகள் ஒவ்வொருவராக இறந்துவிட்டால் அப்பறம் இப் பிரச்சனை இல்லாமற் போய்விடும் என்று அரசு நினைக்கிறது.
பாவம் வியாழம்மா. அவருக்கு அனுதாபம் தெரிவிக்ககூட எம்மவர்களுக்கு தோன்றவில்லை.
இதுதான் கிரிக்கட் அரசியல் என்பதையாவது நம்மவர்கள் புரிந்து கொள்வார்களா?

No comments:

Post a Comment