Tuesday, July 30, 2019

•புழுவைப் புலியாக்க முடியாது –ஆனால் புலியைப் புலி என்று உணர வைக்க முடியும்!

•புழுவைப் புலியாக்க முடியாது –ஆனால்
புலியைப் புலி என்று உணர வைக்க முடியும்!
திருமுருகன் காந்தியை பின்னணியில் இருந்து இயக்குபவர் யார் என்று விசாரிக்க வேண்டும் என்று பார்ப்பண நீதிபதி கூறியிருந்தார்.
அதற்கு தன்னுடைய மகளே தன்னை இயக்குகிறார் என்று திருமுருகன் காந்தி தக்க பதில் அளித்துள்ளார்.
முன்பெல்லாம் நீதிமன்றத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது. தெரிவித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்பார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் நீதிமன்றத்தின் தவறுகள் உடனுக்குடன் விமர்சிக்கப்படுகின்றது. அதுவும் சம்பந்தப்பட்ட நீதிபதியின் முகத்திற்கு நேரிலேயே நடத்தப்படுகின்றது.
அண்மையில் வைகோ அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டபோது புலிகளை ஆதரிப்பது தவறு என்றால் தான் இனியும் இதனை செய்வேன் என அந்த நீதிபதியின் முகத்திற்கு நேரே சொன்னார்.
அடுத்து நந்தினி நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டபோதும் அவர் நீதிபதியை எதிர்த்து வாதிட்டுள்ளார்.
இப்போது திருமுருகன் காந்தியும் தன்னை இயக்குவது தனது மகளே என்று நீதிபதிக்கு தகுந்த பதில் அளித்துள்ளார்.
உண்மையில் இந்திய நீதிமன்றம் என்பது உச்சிக் குடுமிகளின் நீதிமன்றமே. அங்கு தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்ற உண்மை மக்களுக்கு புரிய வைக்கப்பட வேண்டும்.
நீதிமன்றமும் சட்டம், காவல்துறை , ராணுவம் போன்று அரசின் ஒரு ஒடுக்குமுறைக் கருவியே.
தூத்துக்குடி கொலைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஆணையம் தகுந்த சான்றுகள் இல்லை என்றுகூறி தள்ளுபடி செய்துவிட்டது.
பொலிசார் இளம் பெண்ணுக்கு வாயில் சுட்டு கொன்றிருக்கிறார்கள். அதற்கு சான்று இல்லை என்று நீதிபதி தள்ளுபடி செய்கிறார் என்றால் இந்தியாவில் அரசு, பொலிஸ் நீதிபதி எல்லாம் கூட்டுக் களவாணிகள்தானே?
இந்த உண்மையை நாம் மக்களுக்கு கூற வேண்டும். மக்களை இவை அனைத்திற்கும் எதிராக போராட வைக்க வேண்டும்.
அதனையே திருமுருகன் காந்தி செய்துள்ளார். அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
எம்மிடம் புழுவை புலியாக்கும் அதிசய மந்திர சக்தி எதுவும் இல்லை. ஆனால் புலியை புலி என்று உணர வைக்க முடியும்.
மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உண்மையில் வீரம் செறிந்த புலிகளே. ஆனால் அவர்கள் தாங்கள் புலிகள் என்பதை உணராமல் பல்லாண்டுகளாக அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்றனர்.
எமது கடமை என்னவெனில் அவர்கள் புலிகள் என்பதை அவர்களுக்கு உணர வைத்தால் போதும். அப்புறம் அவர்கள் தேவையான போது பதுங்கியும் தேவையானபோது பாய்ந்தும் எதிரியை அழிப்பார்கள்.

No comments:

Post a Comment